கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை..!! மருத்துவர்கள் நாடு தழுவிய போராட்டம்..!!
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையைக் கண்டித்து ஆகஸ்ட் 17 நாடு முழுவதும் வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் “ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்” கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து தலை., கை கால்களில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவத்தில், நீதி கேட்டு மருத்துவர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர்.
மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட மாநில காவல்துறையினரிடம் சிபிஐக்கு மாற்ற வேண்டுமென உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தினர் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தனர்.. இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி கொல்கத்தா போலீசிடம் இருந்து சிபிஐக்கு மாற்ற உத்தரவிட்டார்.
இந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் தீவிரமாக விசாரணை செய்ததில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் “சஞ்சய் ராய்” அதிரடியாக கைது செய்தனர். அதன் பின் சஞ்சய் ராயை இன்று மருத்துவப் பரிசோதனைக்காக மருத்துவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மேலும், ஆர்.ஜி கர் மருத்துவமனையின் 4 மருத்துவர்கள் நேரில் விசாரணைக்கு ஆஜராக சிபிஐ அதிகாரிகள் சம்மன் அனுப்பிப்பட்டுள்ளது.
மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 17 அன்று 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
இது குறித்து இந்திய மருத்துவர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..