மதுரை திருமங்கலம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திக். இவர் அந்த பகுதியில் தனியார் திருமண சேவை மையம் நடத்தி வருகிறார். அவர் ரஜினியின் தீவிர ரசிகராக வாழ்ந்து வருகிறார். அவரை ரசிகர் என்பதை தாண்டி பக்தர் என்றே கூறலாம். அந்த அளவிற்கு அவர் ரஜினியின் மீது அளவற்ற பற்றுக் கொண்டு இருக்கிறார்.
அதன்வெளிப்படுத்தும் விதமாக அவர், தனது அலுவலகத்தில் ரஜினிக்கு தனியாக பூஜை அறை ஒன்றை உருவாக்கி அதில் ரஜினியை தினமும் இரண்டு முறை வழிபட்டு வருகின்றனர். ரஜினியின் முதல் படமான அபூர்வ ராகங்கள் முதல் ஜெயிலர் படம் வரை அந்த அறையில் ஒவ்வொரு படத்தின் புகைப்படங்களும் இடம்பெற்றுள்ளது.
இந்த பூஜை அறையை அமைத்ததோடு மட்டுமில்லாமல், தினமும் காலை மாலை என இரண்டு முறையும் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டு வருகின்றார் என்பது குறிபிடத்தக்கது.
Discussion about this post