பாஜக எம்.பியின் சர்ச்சைப் பேச்சுக்கு கவிஞர் வைரமுத்து கண்டனம் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய, பாஜக எம்.பி ரமேஷ் பிதுரி – பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி டேனிஷ் அலியை நோக்கி ‘ஏய்.. இஸ்லாமிய தீவிரவாதி’ என்றும், ‘பயங்கரவாதி’ என்றும் கடுமையான வார்த்தைகளால் பேசினார். இந்த சம்பவத்துக்கு எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் கவிஞர் வைரமுத்து தனது டிவிட்டர் பதிவில் கண்டனத்தை பதிவிட்டுள்ளார்.
ஒரு நாற்சந்திப் பேச்சாளருக்கும் நாடாளுமன்ற உறுப்பினருக்கும் சொல்லாட்சியில் வேறுபாடு இருக்கிறது. நாடாளுமன்றம் என்பது பளபளப்பான கற்களால் கட்டப்பட்ட சொற்களின் குப்பைத்தொட்டியல்ல. நாட்டின் உரிமைக்குரலும் பண்பாட்டின் பெருமைக்குரலும் தெறித்துக் கிளம்பும் திருத்தலம். அவையல் கிளவிகளை எவர் மொழிந்தாலும் எவர்மீது பொழிந்தாலும் அவரை அவைத்தலைவர் ஒறுத்து ஒதுக்க வேண்டும் நாடு உங்களை கவனிக்கிறது; நாட்டை உலகம் கவனிக்கிறது என குறிப்பிட்டுள்ளார்.
ஒரு
நாற்சந்திப் பேச்சாளருக்கும்
நாடாளுமன்ற உறுப்பினருக்கும்
சொல்லாட்சியில்
வேறுபாடு இருக்கிறதுநாடாளுமன்றம் என்பது
பளபளப்பான
கற்களால் கட்டப்பட்ட
சொற்களின் குப்பைத்தொட்டியல்லநாட்டின் உரிமைக்குரலும்
பண்பாட்டின் பெருமைக்குரலும்
தெறித்துக் கிளம்பும் திருத்தலம்அவையல் கிளவிகளை… pic.twitter.com/HWZiw0O1uv
— வைரமுத்து (@Vairamuthu) September 24, 2023