சனிப்பெயர்ச்சி திருவிழா!!
திருநள்ளாறில் உலகப் புகழ்மிக்க தர்ப்பாரண்யேஸ்வரர் கோவில் காணப்படுகிறது.
இங்கு சனீஸ்வரர் கிழக்கு திசை நோக்கி தனிச் சன்னதியில் அருள்பாலித்து காட்சியளிக்கிறார்.
இங்குள்ள சனீஸ்வர பகவானை தரிசனம் செய்வதற்காக, சனிக்கிழமை அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் சனிப்பெயர்ச்சியின் போதும் லட்சக்கணக்கான பக்தர்கள் இக்கோவிலுக்கு வந்து சனிபகவானை தரிசிப்பது வழக்கம்.
இந்நிலையில், இன்று மாலை 5.20 மணிக்கு மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு சனிபகவான் இடம்பெயர்கிறார்.
எனவே திருநள்ளாற்றில் இன்று மாலை முதல் நாளை மாலை வரை உள்ள 24 மணிநேரமும் கோவில் நடையை மூடாமல் விடிய, விடிய தரிசனம் செய்ய முன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதனால் மக்கள் எவ்வித பயமும் இல்லாமல் சனிப்பெயர்ச்சியின் போது கோவிலுக்கு வந்து சாமிதரிசனம் செய்துவிட்டு வீட்டிற்கு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ADVERTISEMENT
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.