ADVERTISEMENT
2019-ன் கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை…
கோபிசெட்டிபாளையம் அருகே கடந்த 2019ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து ஈரோடு மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஈரோடுமாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள அவ்வையார்பாளையம் பகுதியில் கடந்த 2019ம் ஆண்டு அதே பகுதியைச் சேர்ந்த விஜயகுமார் என்பவரை பூச்சி மருந்து கொடுத்தும் இருசக்கர வாகனத்தை கழுத்தில் ஏற்றியும் சுடுநீரை மேலே ஊற்றியும் கொலை செய்த நான்கு பேருக்கு ஈரோடு மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தயாநிதி ஆயுள் தண்டனை மற்றும் 15ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்
கடந்த 2019ம் ஆண்டு அவ்வையார்பாளையம் பகுதியைச் சேர்ந்த மணி மோகன் என்பவரது மனைவியிடம் விஜயகுமார் தவறாக நடந்து கொண்டதாக மணிமோகன் மற்றும் அவரது உறவினர்களான பூபதிராஜன், நாகராஜ், சதீஷ்குமார் ஆகியோர் விஜயகுமாரை அடித்து கொலை செய்த வழக்கு கடந்த மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.
இந்நிலையில் இவ்வழக்கு குறித்து ஈரோடு மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மணிமோகன், நாகராஜ், பூபதிராஜன், சதீஷ்குமார் ஆகிய நான்கு பேருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 22ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஈரோடு மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி தயாநிதி தீர்ப்பு வழங்கினார்.
தமிழ்நாடு, இந்தியா, உலகம், சினிமா, விளையாட்டு, செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள Madhimugam டெலிகிராம் சேனலுடன் எப்போதும் இணைந்திருங்கள்.