ஒரு பைத்தியத்தின் கீழ் வேலை செய்வது போல..! அண்ணாமலையால் பாஜக வளராது..! மாஜி நேரடி அட்டாக்..!
20,000 புத்தகங்கள் படித்திருக்கிறேன், 2 லட்சம் வழக்குகளை பார்த்திருக்கிறேன், 600 கற்பழிப்பு வழக்குகளை கையாண்டு இருக்கிறேன் என வாய்கூசாமல் பொய் பேசி இதன் மூலமாக தன்னை ஒரு ஹீரோவாக சமூகம் பார்க்கும் என மனப்பிராந்தி அண்ணாமலை என்ற நபரின் அடிநாதம் என தமிழக பாஜகவில் இருந்து நீக்கப்பட்ட கல்யாணராமன் விமர்சித்துள்ளார்.
மக்களவை தேர்தலுக்கு முன் வரை அதிமுக – பாஜக கூட்டணி சுமூகமாக இருந்த நிலையில் தேர்தலின் போது அக்கூட்டணி பிளவுபட்டது. இதன் காரணமாக இரு கட்சிகளுமே மக்களவை தேர்தலில் பலத்த தோல்வியைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்நிலையில் தேர்தலுக்கு பிறகு தமிழக பாஜக முன்னாள் தலைவரும், தெலுங்கானா மாநில முன்னாள் ஆளுநரான தமிழிசை சொன்ன கருத்துகள், தமிழக பாஜகவில் பெரும் பரபரப்பை கிளப்பியதால். அண்ணாமலையின் ஆதரவாளர்கள் சிலர் மாஜியை கடுமையாக திட்டி விமர்சனம் செய்து வருகிறார்கள்.
இதன் காரணமாக திருச்சி சூர்யா சிவா உள்ளிட்ட சிலர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர். அதுமட்டுமில்லாமல் அண்ணாமலையை விமர்சித்த நிர்வாகிகளும் வெளியேற்றப்பட்டனர். அந்த வகையில் தமிழக பாஜகவில் முக்கிய பொறுப்பு வகித்த கல்யாணராமனும் நீக்கப்பட்டார்.
மாஜி கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இஸ்லாம்கள் குறித்தும், நபிகள் நாயகம் குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு 160 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டவர். இந்நிலையில் மக்களவை தேர்தல் தோல்விக்குப் பின் தேசிய தலைமையை அண்ணாமலையை ஏமாற்றி வருவதாக கல்யாணராமன் பேச, அதற்குப் பின் தான் அவர் பாஜகவில் இருந்து கடந்த 3 மூன்று வாரங்களுக்கு முன் நீக்கப்பட்டார்.
இப்படி இருக்க மாஜி வாய்கூசாமல் பொய் பேசி இதன் மூலமாக தன்னை பிரபலமாக்கி கொள்ள அண்ணாமலையை விமர்சித்து வருவது வேடிக்கையாக இருப்பதாக அண்ணாமலை ஆதரவாளர்கள் கடுமையாக கண்டித்து வருகின்றனர்.
அதுதொடர்பாக மாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “10000 கோடிகள் அண்ணாமலை கொள்ளையடித்தாக திருச்சி சூர்யா குற்றம் சாட்டுவதை பார்த்த பின்னர் வரும் முதல் கேள்வி ஏன் அண்ணாமலை மௌனம் காக்க வேண்டும்..?
சூர்யா கூறியதில் எனக்கு முழுமையான நம்பிக்கை இல்லாவிட்டாலும் நிச்சயமாக அந்த தொகை மூன்று பூஜ்ஜியங்களை கொண்டதாக இருக்கும் என்பதை நான் அறிவேன்.
ஆலமரத்தின் எதுவும் முளைக்காது :
அண்ணாமலையின் தலைமையின் கீழ் பாஜக வளராது. அண்ணாமலையின் தகுதிக்கு சுடுகாட்டிற்கு தான் தலைவனாக இருக்க முடியும். ஏனென்றால், அங்குதான் கேள்வி கேட்காத ஜடங்கள் இருக்கும். அதிகபட்சம் அடிமைகளை வைத்து அண்ணாமலையால் கட்சி நடத்த முடியும். அண்ணாமலை அதிமுக பக்கம் திரும்பி விடக்கூடாது என்பதால் அதை கவனித்துக் கொள்ளும் பொறுப்பு ரவீந்திரன் துரைசாமி மற்றும் ஜெ. வி. சி, ஸ்ரீராம் அகியோருக்கு திமுகவால் வழங்கப்பட்டது.
அதே நேரத்தில் சுயநலத்திற்காக, தன்னுடைய சொந்த அரசியல் வளர்ச்சிக்காக எதையும் செய்ய தயாராக உள்ள அண்ணாமலை தவறியும் அதிமுக பக்கம் சென்றுவிடாமல் பார்த்துக் கொண்டனர்.
அண்ணாமலைக்கு அறிவு இல்லை என்பதற்கு ஒரே ஒரு ஆதாரம் வரலாற்று நிகழ்ச்சியை சொல்ல வேண்டும். வின் டீவி அலுவலகம் எழும்பூரில் இருந்த போது நடந்த ஒரு விவாதத்தின்போது அன்றைய பாரத பிரதமரையும், தேசிய தலைவர் அமித்ஷாவையும் ஒருமையில் பேசியவன் தான் இந்த ரவீந்திரன் துரைசாமி.
இந்த ஆடு இருக்கே கசாப்புக் கடைக்காரனை நம்புமா ஆனா அதை வளர்த்தவனை நம்பாதாம் அது மாதிரி தான் அண்ணாமலை. கோவை குண்டு வெடிப்பு சம்பவம், கூட்டணி உடைப்பு, ரகசிய வீடியோக்கள் என அனைத்தையும் திட்டமிட்டு செய்தது அண்ணாமலை தான். சீனியர்களை தனிப்பட்ட முறையில் அழைத்து அவமானப்படுத்தியது, மிரட்டியது என அண்ணாமலை செய்த பல செயல்களின் பின்னால் இருப்பது அண்ணாமலைக்கு உள்ள “Sociopath” என்ற மனோவியாதி.
அந்த வியாதி அண்ணாமலைக்கு இருப்பதால் தான் வாய்கூசாமல் பொய் பேசுவது, 20,000 புத்தகங்களை படித்திருக்கிறேன், 2 லட்சம் வழக்குகளை பார்த்து இருக்கிறேன், 600 கற்பழிப்பு வழக்குகள் மீது நடவடிக்கை எடுத்து இருக்கிறேன் என அண்ணாமலை வாய்கூசாமல் பொய் பேசி வருகிறார்.
அதன் மூலமாக உலகம் தன்னை ஒரு ஹீரோவாக சமூகம் பார்க்கும் என மனப்பிராந்தி அண்ணாமலை என்ற நபரின் அடிநாதம் என சொல்லலாம். ஒரு பைத்தியத்தின் கீழ் வேலை செய்வது என்பது கடினமான காரியம் என்பது பாஜகவின் அனைத்து தலைவர்களின் ஒட்டுமொத்த கருத்து. அதைத்தான் நான் பிரதிபலிக்கிறேன்” என பதிவிட்டுள்ளார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..