துரை வைகோ முயற்சிகளின் முதல் வெற்றி..! வாழ்க வைகோ..! வெல்க மதிமுக..!
களத்தில் மதிமுகம் என்ற ஒரு புதிய அத்தியாயத்தில் திருச்சி மக்களில் ஒருவரை சந்தித்து பேசினோம்.., அப்போது அவர் நம்மிடம் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.. அவர் சொன்னதாவது.
திருச்சி நாடாளுமன்ற எம்.பி துரை வைகோ, எம்.பி-யாக பதவியேற்ற பின் மக்களின் மிக அத்தியாவசிய தேவைகளை கேட்டறிந்தார்.., அப்போது அவருடன் சக MP க்களையும் அழைத்து வந்து மக்களை சந்தித்தது மட்டுமல்லாமல் அடுத்தடுத்து தன்னுடைய முழு ழுயற்சியினால் சாதித்துக்காட்டிய இளம் தலைவர் அண்ணன் துரைவைகோ. அவரின் பணிகள் என்றும் பாராட்டுக்குரியது வாழ்க வைகோ..!! வெல்க மதிமுக..!!!
திருச்சி நாடாளுமன்ற தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராக அண்ணன் துரை வைகோ பதவி ஏற்ற உடன் முதல் வேலையாக ஒன்றிய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம்மோகன் நாயுடு அவர்களை சந்தித்து மூன்று முக்கிய கோரிக்கைகளை அளித்து இருந்தார்.
முதலாவதாக திருச்சி விமான நிலைய ஓடுபாதையை விரிவாக்கம் செய்வதற்கு போர்கால அடிப்படையில் நிதி ஒதுக்கீடு செய்து தர வேண்டும்.
இரண்டாவதாக வளைகுடா நாடுகளில் பணிபுரியும் தமிழர்கள் நலனை கருத்தில் கொண்டு திருச்சியில் இருந்து வளைகுடா நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்படுவதற்கு இருதரப்பு விமான விமான சேவை ஒப்பந்த அடிப்படையில் அனுமதி வழங்கிட வேண்டும்.
மூன்றாவதாக திருச்சியில் இருந்து தலைநகர் டெல்லிக்கும், கொச்சினுக்கும் நேரடி விமானங்கள் இயக்கப்பட வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளையும் பரிசீலித்து தக்க நடவடிக்கை எடுப்பதாக அண்ணன் துரை வைகோ அவர்களிடம் ஒன்றிய விமானத்துறை அமைச்சர் உறுதி அளித்து இருந்தார்..
அதோடு தன் கடமை முடிந்தது என்று நின்று விடாமல் , திருச்சி மாவட்ட ஆட்சி தலைவர் பிரதீப் குமார் IAS , திருச்சி விமான நிலைய இயக்குனர், DRO ராஜலட்சுமி உள்ளிட்ட சம்பந்தபட்ட அனைத்து அதிகாரிகளையும் ஒன்றிணைத்து மாவட்ட ஆட்சி தலைவர் அலுவலகத்தில் வைத்து கலந்துரையாடல் நிகழ்த்தினார்.
அதில் திருச்சி விமான நிலைய விரிவாக்கம் & கூடுதல் ஓடுதளங்கள் அமைப்பதற்கு செயல்திட்டம் உருவாக்கும் பணிகள் குறித்து ஆலோசனை செய்தார்.
இப்படியான அண்ணன் துரை வைகோ அவர்கள் எடுத்த முயற்சிகளின் முதல் வெற்றி செய்தியாக திருச்சியில் இருந்து அபுதாபிக்கு கூடுதலாக வாரம் நான்கு முறை இன்டிகோ விமானம் இயக்கப்பட உள்ளது என்ற தகவல் இன்று வெளி ஆகி உள்ளது.
இந்த அறிவிப்பு உள்ளபடியே அபுதாபியில் பணிபுரிந்து வரும் தமிழர்களுக்கு ஓர் நற்செய்தியாகும்.
பேருக்கு அறிக்கை விடாமல் எங்கள் தலைவர் வைகோ அவர்களை போலவே எடுத்த காரியத்தில் கண்ணும் கருத்துமாய் உளமார நின்று முழுவதுமாக முயற்சி செய்து எடுத்த காரியத்தை வெற்றிகரமாக நடத்தி காட்டுபவராக அண்ணன் துரை வைகோ திகழ்கிறார் என்பதற்கு இந்த ஒரு நிகழ்வு மேலும் ஒரு எடுத்துக்காட்டு.
திருச்சி விமான நிலையத்தை மேலும் மேம்படுத்தி டெல்டா & தென் பகுதி மக்கள் பயனுறும் வகையில் கூடுதல் விமான சேவைகளை அண்ணன் துரை வைகோ பெற்று தருவார். என அவர் நம்மிடம் இந்த தகவல்களை பகிர்ந்தார்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..