டுடே ஸ்நாக் ஆந்திரா புனுகுலு..!
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு 2 கப்
சீரகம் 1 ஸ்பூன்
ரவை 1 1/2 ஸ்பூன்
அரிசி மாவு 2 ஸ்பூன்
வெங்காயம் கால் கப்
மிளகாய்த்தூள் 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் கால் ஸ்பூன்
கொத்தமல்லி இலை சிறிது நறுக்கியது
கறிவேப்பிலை சிறிது நறுக்கியது
உப்பு தேவையானது
பேக்கிங் சோடா கால் ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் 2 கப் இட்லி மாவை சேர்த்துக் கொள்ளவும்.
பின் அதில் ஒரு ஸ்பூன் சீரகம், ஒன்னறை ஸ்பூன் ரவை, அரிசி மாவு இரண்டு ஸ்பூன் சேர்த்து கலந்துக் கொள்ளவும்.
மேலும் அதில் வெங்காயம் கால் கப், மிளகாய்த்தூள் ஒரு ஸ்பூன், பெருங்காயத்தூள் கால் ஸ்பூன், நறுக்கிய கொத்தமல்லி இலை, கறிவேப்பிலை சேர்த்துக் கலந்துக் கொள்ளவும்.
பிறகு தேவையான அளவு உப்பு மற்றும் கால் ஸ்பூன் அளவு பேக்கிங் சோடா சேர்த்து நன்றாக கலந்துக் கொள்ளவும்.
அவ்வளவுதான் இப்போ பொரிப்பதற்கு மாவு தயாராக உள்ளது.
ஒரு ஃபேனில் எண்ணெய் ஊற்றி நன்றாக சூடானதும் அதில் தயாரித்த மாவில் இருந்து சிறிது சிறிதாக உருண்டைகளாக போட வேண்டும்.
பின் ஒரு பக்கம் வெந்ததும் திருப்பி மறுபக்கமும் பொன்னிறமாக மிதமான தீயில் வேகவைத்து எடுக்கவும்.
இதுபோல எல்லா மாவையும் எண்ணெயில் உருண்டைகளாக போட்டு பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையாக டக்குனு ஆந்திரா புனுகுலு சாப்பிட தயாராக உள்ளது.
இதனுடன் காரச்சட்னி தயாரித்து தொட்டு சாப்பிடலாம் ரொம்ப சுவையாக இருக்கும்.
ஈவினிங்கில் குழந்தைகளுக்கு டக்குனு செய்து கொடுக்கலாம்.