எந்த நேரத்தில் வீட்டில் விளக்கு ஏற்றினால் பலன் கிடைக்கும்..?
வீட்டில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபாடு செய்வது இயல்பு, ஆனால் எந்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் பலன் என்று தெரியுமா..?
சூரிய உதயத்திற்கு முன்பாகவே விளக்கை ஏற்றி விட வேண்டும் அதாவது காலை 4:30 முதல் 6 மணி வரை.
மாலை சூரிய அஸ்தமனம் ஆகும் பொழுது மாலை 6 மணிக்கு மேல் விளக்கு ஏற்ற வேண்டும்.
தினமும் காலையும், மாலையும் இந்த நேரத்தில் விளக்கு ஏற்றி இறைவனை வழிபட்டு வந்தால், குடும்பத்தில் ஒற்றுமையும், நிம்மதியும் இருக்கும்.
செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை களில், பூஜை அறையை சுத்தம் செய்து, விளக்கு களை துளக்கி, மஞ்சள் குங்குமம் இட்டு, விளக்கை ஏற்றி வழிபட்டு வந்தால் வீட்டில் உள்ள தர்த்தீரங்கள் விலகும் என கூறுவார்கள்.
இதேப்போல் தொடர்ந்து ஏழு வாரம் வெள்ளிக்கிழமை காலை 4:30 மணி 6மணி வரையும் மாலை 6மணிக்கும் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், வீட்டில் சுபிக்க்ஷமும், மஹாலக்ஷ்மியின் பேர் அருளும் கிடைக்கும் என ஆச்சார்யர்கள் சொல்கின்றனர்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துகொள்ள , தொடர்ந்து படித்திடுங்கள்.
வெ. லோகேஸ்வரி