ஒத்தி வைக்கப்பட்ட நீட் தேர்வு..! காரணம் இது தான்.
எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் மருத்துவ படிப்புகளை, படிப்பதற்கு வருடம் தோறும் மாணவர்களுக்கு, நீட் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது.
இன்று நாடு முழுவதும் ஒரே நாளில் 499 இடங்களில் நீட் தேர்வு நடத்தப்பட உள்ளது.
இதற்காக 20 லட்சம் மாணவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துள்ளனர்.
இதற்காக கடந்த மே 3ம் தேதியை நுழைவு சீட்டை ( All Ticket ) வழங்கப்பட்டுள்ளது.
மாணவர்கள் எந்த நகரத்தில், எந்த தேர்வு மையத்தில், தேர்வு எழுத வேண்டும் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது.
இன்று மதியம் 2மணிக்கு தொடங்கி மாலை 5:20 மணி வரை தேர்வு நடைபெறும். மேலும் இது பற்றி விவரங்கள் அறிய “தேசிய தேர்வு முகம் இணையதளம்” மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.
இந்த வருடமும் சில கடுமையான விதி முறைகள் விதிக்கப் பட்டுள்ளது.
“தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள், ஒரு மணி நேரத்திற்கு முன்பாகவே ” தேர்வு மையத்திற்குள் வந்து விட வேண்டும்.
தமிழகத்தில் மட்டும் 1.50 லட்சம் பேர் எழுதுகின்றனர். அதில் அரசு பள்ளி மாணவர்கள் 14 ஆயிரம் பேர் எழுத உள்ளார்கள்.
தமிழ், ஹிந்தி, ஆங்கிலம் உட்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும்.
இந்நிலையில் இன்று காலை மணிப்பூரில் வன்முறை காரணமாக, நீட் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
மேலும் நீட் தேர்வு, மாற்றியமைக்கப் பட்டு தேதி பின்னர் அறிவிக்கப்படும் என மத்திய கல்வி இணை அமைச்சர் “டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்” அறிவித்துள்ளார்.
Discussion about this post