நியூஸிலாந்து நாட்டில் புகை பிடிக்கும் இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் புகை பிடிப்பு தடை விதிக்கும் வகையில் அந்த நாட்டு அரசு ஒரு சட்டத்தை அமல்படுத்தவுள்ளது. இந்த சட்டம் அமலுக்கு வந்தால், அடுத்த 50 ஆண்டுகளில் புகை பிடிப்பதற்கான குறைந்தபட்ச வயது வரம்பு 63 ஆக இருக்கும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதாவது, நியூஸிலாந்து ஆட்டில் புகைபிடிக்கு பழக்கத்தை முடிவுக்கு கொண்டு வரும் என்ற நோக்கத்தோடு சட்டம் ஒன்று அமலாக உள்ளது. அதில், ஜனவரி 1ம் 2009 பிறந்தவர்களுக்கு புகைபிடிப்பது தடை செய்யப்பட்டுள்ளது. அதாவது 14 வயதிற்கு மேற்பட்டுள்ள நபர்கள் புகை பிடிப்பதற்கு தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் அடுத்த ஆண்டு அமலுக்கு வரும் என்று அந்த நாட்டின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இந்த சட்டம் அமலுக்கு வந்தால் ஆண்டுதோறும் புகைபிடிப்பதற்கான வயது வரம்பு அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்த சட்டம் அமலுக்கு அந்த அடுத்த 63 ஆண்டுகள் கழித்தே சிகிரெட் தடை செய்யப்பட்டவர்களின் மீதான தடை நீங்கு அதற்கும் தனக்கு 80 வயதுக்கு மேல் ஆகிவிட்டது என்று உறுதி செய்தால் தான் அவரால் கடையில் சிகெரட் வாங்க முடியுமாம். இருப்பினும், தடை நீங்குவதற்குள் புகைபிடிக்கும் பழக்கம் உலகில் இருந்து மறைந்துவிடும் என்றும் கூறுகின்றனர். இதுபற்றி அந்தநாட்டின் சுகாதார அமைச்சர் மருத்துவர் ஆயிஷா வெரால் கூறுகையில், இளைஞர்கள் ஒருபோதும் புகைபிடிக்க தொடங்கக்கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்ய விரும்புகிறோம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த சட்டத்தை அந்த நாட்டின் மருத்துவர்களும் சமூக ஆர்வலர்களும் பெரிதும் வரவேற்றுள்ளனர். இந்த சட்டம் அமலுக்கு வந்த பிறகு புகைபிடிப்பவர்களின் அளவு கணிசமாக குறைய தொடங்கி முற்றிலும் புகைபிடிப்பதிலிருந்து வெளியே கொண்டு வரும் என்று நம்புவதாக தெரிவித்துள்ளார்.