தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனரான அமீர் உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்து வருகிறார். அதனால் அந்த படத்தின் ப்ரோமோஷனில் பங்கேற்றார் அப்போது செய்தியாளரை சந்தித்த அமீர் அவரின் பருத்திவீரன் படத்தின் அடுத்த பாகம் குறித்து தெரிவித்துள்ளார்.
உயிர் தமிழுக்கு என்ற படத்தில் நடித்து வரும் அமீர் அந்த அப்படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் பங்குபெற்று வருகிறார். இந்நிலையில் நேற்று நடந்த நிகழ்வில் பங்கேற்ற நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவரிடம் வணங்கான் படம் கைவிடபட்டது குறித்து கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பதிலளித்த அவர், வணங்கான் படத்தை பற்றி தனக்கு எந்த ஒரு தகவலும் தெரியாது அதனால் அதை பற்றி என்னால் கருத்து கூற முடியாது என்று கூறினார்.
மேலும் அவரிடம் அவரின் வெற்றிப்படமாந பருத்திவீரன் படத்தின் அடுத்த பாகம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பருத்திவீரன் படத்தில் பருத்திவீரன், முத்தழகு இருவரும் இறந்துவிட்டனர் அவர்களை எங்கிருந்து கூட்டிட்டு வரமுயும் என்றும் பருத்திவீரன் என்ன முனி படமா பாகம் 1,2,3 என்று எடுத்து செல்வதற்கு என்று கலகலப்பாக பேசினார். மேலும், பருத்திவீரன் 2 என்ற படம் வரத்து என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post