கடைசி நிமிடத்தில் கூட வாழ்க்கை மாறும்..!! குட்டி ஸ்டோரி-20
ஒரு காட்டில மான் வந்து தன்னுடைய குட்டியை உலகிற்கு கொண்டு வருவதற்காக கஷ்டப்பட்டு கொண்டு இருக்கு.., தூரத்தில் இருந்து பார்த்த ஒரு அழகான அருவி தெரியுது..
அப்போ அந்த மான் நினைக்குதாம் “சரி நம்ப இந்த அழகான இடத்துல போய் பிரசவம் பார்த்துக்கலாம் அப்படி சொல்லிட்டு..,
ஆனா அந்த அருவிக்கு முன்னாடி ஒரு பெரிய ஆலமரம் எறிஞ்சுட்டு இருக்கு..
வலது பக்கம் பார்த்தா ஒரு வேடன் அந்த மானை வேட்டையாட காத்துட்டு இருக்கான்..
இடதுபக்கம் ஒரு சிங்கம் மானை கொன்று இரையை எடுத்துட்டு போறதுக்காக காத்துட்டு இருக்கு..,
மேல வானம் இருடீட்டு மழை வரா மாதிரி இருக்கு..
அந்த மானுக்கு ஒன்னுமே புரியலை என்னடா இது நம்ப வாழ்க்கை முடிஞ்சு இருந்தா கூட பரவாயில்லை.., நம்ப குழந்தை பிறக்கும் பொழுதே ஏதாவது ஆயிட்டா என்ன பண்றது.. அப்படின்னு யோசிச்சுட்டே கண்ணை மூடுது..
அப்போ திடிர்னு ஒரு சத்தம்.., அந்த மான் கண் முழிச்சு பாக்குற அப்போ
எரிஞ்சுட்டு இருந்த ஆலமரத்தை அணைஞ்சுட்டு இருக்கு..,
வேடன் கண் பார்வை இல்லாம இருக்கான்.., சிங்கம் செத்து கிடைக்குது..
என்ன ஆச்சுனா :
இடிச்ச இடியில வேடனுக்கு கண் பார்வை போயிடுது அதுனால அவன் மானை பார்த்து விட்ட அம்பு.., சிங்கத்தை நோக்கி போயிடுது..
அந்த அம்பு குத்தி சிங்கம் இறந்துடுச்சு..
எறிஞ்சுட்டு இருந்த மரத்தை மழை வந்து அனசுடுச்சுட்டு இருக்கு..
அந்த மான் எந்த திசையில் போயிருந்தாலும் அது உயிர் போயிருக்கும்.., பிரச்சனைய பார்த்து ஓடாம ஒரு நிமிசம் கண்ணை மூடி யோசிச்சதுனால தான் அந்த மான் வாழ்க்கை மாறிடுச்சு..
-வெ.லோகேஸ்வரி
Discussion about this post