இறைவனடி சேர்ந்த பங்காரு அடிகளார்..!! உயிர் இழப்பு காரணம் குறித்து வெளிவந்த அதிர்ச்சி தகவல்…!!
மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலின் “சித்தர் பீடத்தின் நிறுவனர் பங்காரு அடிகளார்” இன்று மாலை மாரடைப்பின் காரணமாக காலமானார்…
மேல் மருத்துவத்தூர் கோவில் மட்டுமின்றி பல கல்வி அறக்கட்டளை நிறுவனங்கள்.., மருத்துவ மனைகள் போன்றவற்றை இயக்கி வருகின்றனர்.
ஆதிபராசக்தி கோயிலுக்கு அனைத்து நாட்களுக்கும் பெண்கள் சென்று வழிபாடு செய்யலாம்.. என்று பெண்களுக்காக ஒரு புதுவித புரட்சியை கொண்டு வந்தார்
அன்று முதல் இன்று வரை ஆதிபராசக்தி கோவில் என்றாலே முதலில் நினைவிற்கு வருபவர் அடிகளார் மட்டுமே…
அனைவரின் மனதிலும் சிறந்த ஆன்மிகவாதியாக இருக்கும் அவர்,
இன்று மாலை திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார்..
இந்த தகவல்கள் வெளியான நிலையில், பலரிடமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஒரு வருடமாகவே உடல்நிலை சரியில்லாத காரணத்தால் வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வந்தார்..
தற்பொழுது அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ள நிலையில் பக்தர்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்காக அவரின் இல்லத்தில் உடல் வைக்கப்பட்டுள்ளது..
மேலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்..
Discussion about this post