முகம் ஜொலிக்க இதை ட்ரைப் பண்ணுங்க…
இயற்கை அழகு சாதனப் பொருட்களில் எலுமிச்சை பழமும் ஒன்று. இது சருமத்தை ஃபிளீச் செய்வதால் சருமத்தில் உள்ள அழுக்குகள், கரும்புள்ளிகள், பிக்மென்டேஷன் போன்றவற்றை நீக்கி சருமத்தை பொலிவடையச் செய்கிறது.
எலுமிச்சை பழச்சாற்றை நிறைய அழகுசாதனப் பொருட்களில் சேர்க்கிறார்கள். என்வே இத்தகைய நன்மைகளை சருமத்திற்கு தரும் எலுமிச்சை பயன்படுத்தி ஸ்கரப் ஒன்றை எப்படி தயார் செய்யலாம் என்று பார்ப்போம்.
எலுமிச்சை ஸ்கரப்:
-
எலுமிச்சை ஸ்கரப் பயன்படுத்துவதற்கு முன் முகத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவிக் கொள்ள வேண்டும்.
-
பின் எலுமிச்சை பழத்தை இரண்டாக கட் செய்து கொள்ள வேண்டும்.
-
பிறகு கட் செய்த பாதி எலுமிச்சை பழத்தில் சிறிதளவு சர்க்கரையை சேர்த்து முகம் மற்றும் மூக்கின் பக்கவாட்டில் மெதுவாக தேய்க்க வேண்டும்.
-
கரும்புள்ளிகள் பொதுவாக முக்கின் பக்கவாட்டில் தான் தங்கியிருக்கும். அதனால் குறைந்தது 5 நிமிடம் தேய்க்க வேண்டும் பின்னர் குளிர்ந்த நீரைக் கொண்டு கழுவ வேண்டும். இதனை வாரம் ஒரு முறை செய்துவர அழகான சருமத்தை பெறலாம்.
-
கரும்புள்ளிகள் அதிகம் இருக்கும் முகத்தில் வாரம் இரு முறை செய்தால் நல்ல பயன் கிடைக்கும்.