ஆடி மாத கடைசி வெள்ளி.. இதை கட்டாயம் செய்யுங்க..!
ஆடி மாதம்:
12மாதங்களில் வரும் ஒவ்வொரு மாதமும் விஷேசம் தான். குறிப்பாக ஆடி மாதம் என்றால் கூடுதல் சிறப்பு. இந்த மாதத்தில் வரும் ஆடி செவ்வாய், ஆடி அமாவசை, ஆடி கிருத்திகை, ஆடி வெள்ளிகிழமை, ஆகிய நாட்களில் பக்தர்கள் அம்மன் கோவில்களுக்கு செல்வதும், கூழ் ஊற்றுவது போன்றவற்றை செய்வது வழக்கம்.
அந்த வகையில் இன்று ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி என்பதால் கட்டாயம் இதை செய்யுங்கள்.
வரலட்சுமி பூஜை,சுமங்கலி பூஜை:
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளி விஷ்ணு பகவானின் மனைவியான மகாலட்சுமிக்கு உரியது. இந்த கடைசி வெள்ளிக்கிழமையின் போது தான் வரலட்சுமி பூஜை நடைபெறும். இந்த பூஜை திருமணமான பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று.
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையின் போது நோன்பு இருந்து, மகாலட்சுமிக்கு பூஜை செய்து, படையல் படைத்து, சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் கொடுப்பார்கள்.
குத்து விளக்கு பூஜை:
கோயில்களில் வழக்கமாக சிறப்புவாய்ந்த நாட்களில் விளக்கு பூஜை செய்யப்படுவது வழக்கம்.
அந்த வகையில், ஆடி வௌ்ளிக்கிழமை நடைபெறும் குத்துவிளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆடி மாதங்களில் களைகட்டும் அம்மன் கோயில்கள் இந்த ஆடி கடைசி வெள்ளிக்கிழமை தினத்தில் நடக்கும் பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்தது.
ஆடி கடைசி வெள்ளியில் நடக்கும் குத்துவிளக்கு பூஜையில் பங்கேற்றால் பெண்களுக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும் என்பது ஐதீகம். மேலும் குடும்பத்தில் சுபிக்ஷம் உண்டாகும். வீட்டில் நிலவி வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும்.
ஆடி வெள்ளி விரதம்:
ஆடி மாதத்தின் கடைசி வெள்ளியன்று விரதம் இருப்பது மிகவும் சிறப்பானது. அம்மனின் அனுக்கிரகம் கட்டாயமாக கிடைக்கும்.
விரதமிருப்பவர்கள், காலையில் அம்மனுக்கு விளக்கேற்றி, தீபாராதனை செய்து இனிப்பு நைவேத்யம் செய்ய வேண்டும்.
அதன் பிறகு மாலையிலும் அதேபோல விளக்கேற்றி, பின்னர் விரதத்தை நிறைவேற்ற வேண்டும்.
ஆடி மாத கடைசி வெள்ளியில் செய்யும் விரதத்தில் வீட்டில் துன்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும் ( உடல்நலக்குறைவு இருப்பவர்கள், வயதானவர்கள் விரதம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை.
உச்சரிக்க வேண்டிய மந்திரம்:
லலிதா சஹஸ்ரநாமம் மந்திரம் சொல்லலாம். இதனால் கண் திருஷ்டி, தோஷங்கள் , மற்றும் நோய்கள் நீக்கும் என்று சொல்லப்படுகிறது.
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”