பெண் மருத்துவருக்கு நேர்ந்த கொடூரம்.. கண்டனம் தெரிவித்த கிரிக்கெட் வீரர்கள்..
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா நகரில் உள்ள அரசு மருத்துவமனையில், பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம், நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இதுவரை, நடிகை சமந்தா, தெலுங்கு நடிகர் ராம் சரனின் மனைவி, ஆலியா பட் உள்ளிட்ட பல்வேறு பிரபலங்கள், தங்களது கண்டனங்களை தெரிவித்து இருக்கின்றனர். அந்த வகையில், இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் ஸ்ரேயஸ் ஐயர், ஜேஸ்பிரித் பும்ரா ஆகியோர், தங்களது கண்டனங்களை, எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரேயஸ் ஐயர் பதிவிட்டது என்ன?
ஸ்ரேயஸ் ஐயர் தன்னுடைய சமூக வலைதள பதிவில், “கொல்கத்தா நகரில் நடந்த கொடூரத்தால், நாங்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்துள்ளோம். எங்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.
பும்ரா கூறியது என்ன?
ஜேஸ்பிரித் பும்ரா தன்னுடைய பதிவில், “பெண்களிடம், அவர்களுடைய பாதையை மாற்ற வேண்டும் என்று சொல்லாதீர்கள். நீங்கள் தான் உங்களது பாதையை மாற்ற வேண்டும். ஒரு பெண் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறாரோ அதற்கு முழு தகுதி உடையவர் ஆவார்“ என்று கூறியுள்ளர்.
-பவானி கார்த்திக்
தொடர்கதை -2 – Written – 500
“தோல்வியை கண்டு அஞ்சாதே வெற்றியை கண்டு கர்வம் கொள்ளாதே”