நாமக்கல் பழம்பெரும் கோவிலில் கும்பாபிஷேகம்..!
நாமக்கல் மாவட்டம் கீழ்சாத்தம்பூர் பிரசித்தி பெற்ற அருள்மிகு செல்லாண்டி அம்மன் ஆலய மகா கும்பாபிஷேகம் வருகின்ற 3.9.23 ஞாயிற்றுக்கிழமை காலையில் நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்டம் கீழ்சாத்தம்பூரில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் விலையன் குலம் குடிப்பாட்டு மக்களின் குல தெய்வமான அருள்மிகு செல்லாண்டி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு அனைத்து சிற்ப வேலைப்பாடுகளும் ஆலய திருப்பணிகள் முடிவுற்றன. இதையொட்டி வேதகுருமார்கள் மந்திரங்கள் முழங்க யாகசாலை அமைத்து வேள்விகள் நடைபெற்று வருகின்றது.
இன்று முக்கிய நிகழ்வாக காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் தீர்த்தம் எடுக்கும் நிகழ்ச்சி கோவில் நிர்வாகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விலையன் குலத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஊர் பெருமக்கள் அனைவரும் வேலூர் காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது.
அதிகாலையில் பக்தர்கள் காவிரி ஆற்றில் புனித நீராடி தீர்த்தம் எடுத்து மூலவர் அம்மனுக்கு அபிஷேகம் செய்வதற்கு கோவில் அர்சகர் தீர்த்த கலசத்துடன் யானையின் மீது அமர்ந்து வர யானை, ஒட்டகம், குதிரை, ஊர்வலமாக அணிவகுத்து வந்தது.
உறுமி மேளம் செண்டை, மேளதாளம் இசை வாத்திய கருவிகள் முழங்க சுமார் 5000 திற்கும் மேற்பட்ட பக்தகோடி பெருமக்கள் அம்மன் அபிஷேகத்திற்கு தீர்த்த கலசங்களுடன் சென்றனர் . ஆண்கள், பெண்கள் முளைப்பாரி எடுத்து வந்து ஊர்வலமாக கலந்து கொண்டனர்.
கரகாட்டம், ஒயிலாட்டம், கொங்கு மக்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி ஆன ஈசன் வள்ளி கும்மியை சேர்ந்த 1200 பெண்கள் கும்மி அடித்து அம்மன் பாடல்களை பாடி ஆடல் பாடலுடன் உற்சாகத்தோடு தீர்த்த கலசங்களை எடுத்துச் சென்றனர். இதில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..