மும்பையில் இன்று இந்திய கூட்டணியின் 2வது ஆலோசனை கூட்டம் நடைப்பெற்றது. இதில் காங். தலைவர்கள் சோனியா, ராகுல், கார்கே பங்கேற்றனர். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மேற்குவங்க முதலமைச்சர் மம்தா உள்ளிட்டோரும் பங்கேற்றனர். இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் 28 கட்சிகளை சேர்ந்த 63 தலைவர்கள் பங்கேற்றனர்.
ஆலோசனைக் கூட்டத்தில் பின்பு காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியதாவது,
இன்று, இரண்டு பெரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இந்த மேடையில் உள்ள கட்சிகள் ஒன்றிணைந்தால், தேர்தலில் பாஜக வெற்றி பெறுவது சாத்தியமில்லை. மிகவும் திறமையான முறையில் ஒன்றிணைவதே எங்கள் முன் உள்ள பணி. .பிரதமருக்கும் ஒரு தொழிலதிபருக்கும் இடையேயான தொடர்பை ஒவ்வொருவரும் பார்க்க வேண்டும்.
இந்திய கூட்டணி பாஜகவை தோற்கடிக்கும் என்று நான் நம்புகிறேன்.தொகுதி பங்கீடு குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம் . பாஜகவை வீழ்த்த வேண்டும் என்பதே நோக்கம்.நமது எல்லை பகுதியை தங்களுடன் இணைத்து சீனா வரைபடம் வெளியிட்டுள்ளது .ஜி 20 மாநாடு நடக்கும் நிலையில் பிரதமர் மோடி மவுனம் கலைக்க வேண்டும் . என தெரிவித்தார்.
Discussion about this post