குழந்தைகளுக்கு பிடித்த ஸ்வீட்டான ஸ்நாக்ஸ்..!!
ஓடி அடி விளையாடி களைப்பாகும் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும், பிடித்த படியும் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் தர விரும்பினால், இதை ட்ரை பண்ணுங்க.
தித்திக்கும் “பீநட் பட்டர் ம்ஃபின்ஸ்” எப்படி செய்வது என்பது பற்றி பார்க்கலாம்.
செய்ய தேவையான பொருட்கள் :
கேக்மாவு 150 கிராம்,
பேக்கிங் பவுடர் ஒரு ஸ்பூன்,
வெண்ணெய் 110 கிராம்,
சர்க்கரை 200 கிராம்,
பீநட் பட்டர் – 4 ஸ்பூன்,
முட்டை 2,
பால் 80 மிலி,
வெண்ணிலா எசன்ஸ் ஒரு ஸ்பூன்,
செய்முறை : கேக்மாவு மற்றும் பேக்கிங் சோடாவை ஒன்றாக பாலில் கலக்க வேண்டும். நன்கு கலக்கியதும் அதில் ஒவ்வொரு முட்டையாக சேர்த்து நன்கு கருகளையும் வரை கலக்க வேண்டும். 10 நிமிடம் கழித்து வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பீநட் பட்டர் சேர்க்கவும்.
பின் ஒரு பாத்திரத்தில் வெண்ணெய் தடவி கொள்ள வேண்டும், கலக்கிய மாவை எடுத்து அதில் ஊற்றி கொள்ளவும்.
ஒரு குக்கரின் உள்ள தேவையான அளவு தண்ணீர் ஊற்றிக்கொள்ள வேண்டும், பின் அதன் மேல் ஒரு பாத்திரத்தை கவிழ்த்த படி வைக்க வேண்டும். அதன் மேல் மேக் செய்த கேக்கை வைத்து குக்கரை மூட வேண்டும்.
ஓவன் உள்ளவர்கள் 180டிகிரி செல்ஸியஸ் அளவிற்கு ஹீட் செய்துக்கொள்ளவும். பின் 20 – 25 நிமிடம் கழித்து, கேக்கை எடுத்துவிடவும். எடுத்த அந்த கேக்கின் மேல் பீநட் பட்டர் கீரிமை தடவி பொடி சாக்கோ சிப்ஸ் போட்டால்.., சுவையான கேக் தயார்.
மேலும் இதுபோன்ற பல குழந்தைகள் குறிப்புகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
Discussion about this post