பிரச்சனைகளை தீர்க்கும் கீழப்பாவூர் நரசிம்மர்..
மூலவர் நரசிம்மர் விசித்திர வடிவம் கொண்டவர். காரணம் 16 கைகள், உக்ர வடிவத்துடன் இரணியனை சம்ஹாரம் செய்த நிலையில், பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். நரசிம்மப் பெருமாள் மேற்கு நோக்கி அமர்ந்திருப்பார்.
இரண்யனை மடியில் கிடத்தி, இரண்டு கைகளால் தாங்கிப் பிடித்து, இரண்டு கைகளால் குடலை உருவ, இதர கைகளில் சங்கு சக்கரதாரியாய் ஆயுதங்களுடனும், வாழ்த்தும் கைகளுடன் ஹிரண்ய வதத்தோற்றம் கொண்டுள்ளார் தான் “நரசிம்ம பெருமாள்”.
இந்தியாவில், 16 கைகள் கொண்ட நரசிம்மர் காட்சி தரும் மூன்று தலங்களில் இதுவும் ஒன்று. மற்ற இரு கோயில் களும், இராஜஸ்தானிலும், மற்றொன்று தமிழ்நாட்டில் உள்ள கடலூர் மாவட்டத்தில், சிங்கிரிகுடி அல்லது சிங்கர்குடி என்ற கிராமத்தில் அமைந்துள்ளன.
கீழப்பாவூர் நரசிம்மரை வழிபட்டால் அறிந்தும் அறியாமலும் சென்ற பிறவி, மற்றும் இந்தப் பிறவியில் செய்த பாவங்கள் நீங்கி, முக்தி கிடைக்கும். மேலும், இத்தலத்து நரசிம்மரை சேவிப்பதானல் , அஹோபிலம் நரசிம்மரை சேவித்த பலன் கிடைக்கும்.
இத் திருத்தலத்தின் மூலவர், நரசிம்மப் பெருமாள், தாயார் அலர்மேல் மங்கை, தலத் தீர்த்தம் நரசிம்ம தீர்த்தம். இக்கோவிலில் சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை மாலையும் இரவும் அல்லாத நடுவேளை நேரத்தில், நரசிம்மரின் உக்ரம் காரணமாக சிங்கம் கர்ஜிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
அதுமட்டுமின்றி பால், இளநீர் அபிஷேகம் செய்ய தொடங்கியதும் சத்தம் நின்று விடுமாம். நரசிம்மரின் உக்கிரத்தை தணிக்க இவருடைய சந்நதிக்கு முன், பெரும் தெப்பக்குளம் ஒன்றை அமைத்து, நரசிம்மரின் உக்ரத்தை தணித்து கொண்டார் என பல வரலாற்றில் கூறியுள்ளனர்.
கல்யாணத்தடை, வழக்குகள், கடுமையான நோய் உடையவர்கள் இக்கோவிலுக்கு சென்று பரிகாரங்கள் செய்து வழிபட்டால்.., பிரச்சனைகள் தீர்ந்துவிடும் என்பது ஐதீகம்..
கோயில் திறந்திருக்கும் நேரம்: காலை 7.30 – 10.30 மற்றும் மாலை 5 – 7.30 வரை,
கோயில் தொடர்புக்கு: 9442330643
தென்காசியில் இருந்து கிழக்கில் பாவூர்சத்திரம் – சுரண்டை என்ற ஊருக்குச் செல்லும் வழியில் 2 கிமீ
தொலைவில் இக்கோயில் அமைந்துள்ள உள்ளது.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள், திருத்தலங்கள் சிறப்பு பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்