சந்திராயன் 3 இவ்வளவு தூரம் சென்று விட்டதா..? வெற்றியில் சுற்று பாதை..
நிலவின் தென் துருவத்தை ஆராய்வதற்காக எல்.வி.எம் 3 ராக்கெட், மூலம் சந்திராயன் -3 வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. பூமியின் தரை மட்டத்தில் இருந்து 170 கிமீ உயரத்தில் புவியின் நீள்வட்ட பாதையில் சந்திராயன் 3 நின்றது. இந்நிலையில் நீள்வட்ட பாதையில் பூமிக்கு அருகில் இருந்து நெடுந்தொலைவிற்கு விண்கலம் சென்றால் மட்டும் தான் நிலவின் சுற்று பாதைக்கு அதை கொண்டு செல்ல முடியும்.
இந்நிலையில் சந்திராயன் -3 விண்கலத்தின் முதல் சுற்று பாதையை உயர்த்தும் பணியை இஸ்ரோ விஞ்ஞானிகள் வெற்றிகரமாக நிகழ்த்தியுள்ளனர். தற்போது 41,762கிமீ x 173கிமீ ஆர்பிட் என்ற சுற்று பாதையில் சந்திராயன் 3 நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது சுற்றுப்பாதையில் குறுகிய தூரம் 173 கிலோ மீட்டராகவும், அதிகபட்ச தூரம் 41,762 கிமீ தூரமாகவும் அமைந்துள்ளது.
பூமிக்கும் நிலவிற்கும் 4கிமீ தூரம் உள்ள நிலையில்.., தற்போது சந்திராயன் 3 விண்கலம் 41,762 கிமீ வேகத்தில் சென்றுள்ளது. சந்திராயன் 3, விண்கலத்தின் நிலை சிறப்பாக உள்ளது எனவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் வருகின்ற ஜூலை 18, 20 மற்றும் 25ம் தேதி களில் சந்திராயன் 3, விண்கலத்தில் புவி பாதையில் ஒரு லட்சம் கிமீ தொலைவிற்கு பயணித்திருக்கும் என இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.