கார்த்திகை முதல் நாள் வழிபாடு..!! இதை செய்ய மறக்காதீங்க..!!
இன்று கார்த்திகை முதல் நாள்., இன்றைய நாளில் நாம் வழிபாடு செய்ய முறைகள் பற்றியும் வழிபட வேண்டிய தெய்வங்கள் பற்றியும் பார்க்கலாம்.
இன்று கார்த்திகை முதல் நாள்., இன்றைய நாளில் ஐயப்பன் சுவாமிக்கு மிகவும் விஷேசமான நாள், இந்த மாதம் முழுவதும் ஐயப்பனுக்கு விரதம் இருந்து, மாலை அணிந்து, சபரிமலை செல்வது வழக்கம்.
அப்படியாக இன்றைய நாளில் நாம் ஐயப்பன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யலாம்.. இன்றைய நாளில் நாம் அவருக்கு விரதம் வழிபாடு செய்வது சிறந்த பலனை கொடுக்கும்..
கோவிலுக்கு சென்று வழிபாடு செய்ய முடியாத பக்தர்கள் வீட்டில் ஐயப்பன் படம் முன்பு நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்யலாம்..
ஐயப்பன் மட்டுமின்றி இன்றைய நாளில் நாம் சிவன் கோவிலுக்கு சென்று வழிபடலாம்.. காரணம் நேற்று மாலை தொடங்கிய பௌர்ணமி இன்று பிற்பகல் 12:15 மணியுடன் முடிகிறது. நேற்று மாலை அனைத்து சிவன் கோவில்களிலும் ஐப்பசி பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அன்ன அபிஷேகம் செய்யப்பட்டது..
அதேபோல் இன்று மதியம் பௌர்ணமி முடிவடையும் நிலையிலும், கார்த்திகை முதல் நாள் பிறந்ததையொட்டி சிவனுக்கு வில்வ இலை கொண்டு அர்ச்சனை செய்து வழிபட்டால் சிறந்த பலன்கள் கிடைக்கும்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..