ராஜாங்க கோலத்தில் கள்ளழகர்..!! – பரமக்குடியில் நிறைவு
பரமக்குடி மாவட்டத்தில் உள்ள சுந்தரராஜா பெருமாள் கோயிலில் கடந்த ஏப்ரல் 30ம் தேதி தொடங்கியது. மே 5ம் தேதி அதிகாலை கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி, அன்று காலை 10:00 மணிக்கு தொடங்கி , குதிரை வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு. அன்று இரவு வண்டியூர் சென்றார்.
மறுநாள் காலை மே 6ம் தேதி சேஷ வாகனத்தில் மண்டூக மகரிஷி சாப விமோசனமும், தச அவதார சேவையும் நடைபெற்றது. மே 7ம் தேதி இரவு அவரின் திருவடியான கருட வாகனத்தில், பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இதனை தொடர்ந்து நேற்று காலை மோகினி அவதார சேவையில் அருள் பாலித்து, நேற்று இரவு ராஜங்க அலங்காரத்தில் முத்து பல்லக்கில் வைகை முழுவதும் வலம் வந்தார்.
இன்று காலை 8:00 மணிக்கு கள்ளழகர் திருக்கோலத்தில் பூ பல்லக்கில் வீதி ஊர்வலம் வந்து மாலை 6:00 மணிக்கு திருக்கோயிலை அடைய இருப்பதாக. சுந்தரராஜ பெருமாள் தேவஸ்தா டிரஸ்டிகள் தெரிவித்தனர்.
மேலும் இதுபோன்ற பல தெய்வீக தகவல்களை பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
வெ.லோகேஸ்வரி
Discussion about this post