செய்வினை பில்லி சூனியத்தில் இருந்து விடுபட இவரை வழிபட்டால் போதும்..!!
தன்னை நாடி வரும் பக்தர்களை காக்கும் கடவுளாக இருப்பவர் “கருப்பசாமி”. இவர் ஒரு கிராம காவல் தெய்வம். கருப்பசாமி, கருப்பன்ன சாமி எனவும் பக்தர்கள் அழைப்பார்கள்.
காத்து, கருப்புகள் நம்மை நெருங்காமல் எப்பொழுதும் நம்முடனே இருந்து காத்து வழிநடத்துபவர் கருப்பசாமி. சுருட்டு மற்றும் சாராயம் இவருக்கு பிடித்த படையல் வகைகளில் ஒன்று. பெண் பக்தர்கள் கூட கருப்பசாமி கோயிலுக்கு சுருட்டு மற்றும் சாராயம் வாங்கி வைத்து வழிபடலாம்.
எப்பொழுதும் பரிசுத்தமாக இருப்பவர்களால் மட்டுமே கருப்பசாமிக்கு பூஜை செய்ய முடியும். பொய் சொல்பவர்கள், பாவங்கள் செய்பவர்களை கருப்ப சாமிக்கு பிடிக்கவே பிடிக்காது. அப்படி செய்பவர்களுக்கு சிறந்த தண்டனையும் அவர் கொடுத்து விடுவார்.
கருப்பசாமி பூஜையில் அமர்ந்தவுடன் விளக்குயேற்றி, சங்கல்பம், நாள், நட்சத்திரம், திதி, கோத்திரம் ஆகியவற்றைச் சொல்லி வணங்கினால் நல்லதே நடக்கும். அதுபோல நீங்கள் எந்த காரியத்திற்காக பூஜை செய்யப் போகிறீர்களோ அந்த காரியத்தை முழுவதுமாக உங்களுடைய மனதில் நினைத்துக் கொண்டே பூஜையை தொடங்க வேண்டும்.
கருப்பசாமி எந்த நேரத்திலும் நியாம், தர்மத்திற்கு துணை நிற்கக் கூடியவர். தன்னை வேண்டி வந்து வழிபாடு செய்யக்கூடிய பக்தர்களுக்கு எந்த குறையும் வைக்க மாட்டார்.
கருப்பசாமி ஆஞ்சநேயருக்கு நிகரானவர் என கூறுகிறார்கள். ஆஞ்சநேயரைப் போல கருப்பசாமி ராமர் மீது அதிக பக்தி கொண்டு அவரையே வழிபட்டு வந்தவர். பகவான் ராமரால் படைக்கப்பட்டவர் கருப்பசாமி என்பதால் அவரை ஆஞ்சநேயருக்கு நிகரானவர் எனவும் அழைப்பார்கள்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக கதைகள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..