மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சோனியா காந்தி..!!
காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியாகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். லேசான காய்ச்சல் காரணமாக டெல்லி கங்காராம் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இது குறித்து மருத்துவர்களிடம் கேட்ட பொழுது, தற்போது அவரின் உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூச்சுக்குழாயில் ஏற்பட்டுள்ள தொற்றால் அவர் பாதிக்கப்பட்டுள்ளார் எனவும்.., உடல் சரியில்லா சமையத்திலும் ஆகஸ்ட் 31ம் தேதி முதல் செப்டம்பர் 1ம் தேதி வரை நடைபெற்ற கூட்டத்தில் சோனியா காந்தி பங்கேற்று இருப்பதாகவும் காங்கிரஸ் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.
இவரின் உடல்நிலை சரியாக வேண்டும் என்பதற்காக டெல்லி முழுவதும் உள்ள கோவில்களில் காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொது மக்கள் பூஜைகள் செய்து வருகின்றனர்.
Discussion about this post