லைப்ல ஜெயிக்க இப்படி யோசிச்சாலே போதும்..!! குட்டி ஸ்டோரி-17
ஒரு ஊர்ல ஒரு ராஜா இருக்காரு, அவரோட மந்திரி ரொம்பவே அறிவாளியான ஆளு.. ஒருநாள் என்னப் பண்றாரு அந்த ஊரை விட்டு ஓடி போயிறாரு ராஜாவுக்கு ஒரே கவலை.
என்னடா இது இப்படி ஒரு அறிவாளியான மந்திரி ஓடிட்டானே இவன மாதிரி ஒரு அறிவாளியான மந்திரியை எப்படி கண்டு பிடிக்குறது..,
யோசிச்சுட்டே அங்க இருக்க மத்த மந்திரிகளை அழைத்து ஒரு வாரத்துக்குள்ள அறிவாளியான மந்திரி வேணும் எல்லோரும் போய் தேடி கூட்டிட்டு வாங்க அப்படி சொல்லி அனுப்புறாரு.
ஒருவாரத்துக்கு பின்.., ஒருத்தர் வராரு அவரு வந்த ஒடனே இரண்டு கேள்வி கேக்குறாரு அந்த இரண்டு கேள்விக்கும் சரியான பதில அந்த நபர் சொல்லுறாரு.
அதுக்கு அப்புறம் ராஜா ஒரு டாஸ்க் வெக்குறாரு அது என்னனா.., ஒரு காகிதத்துல கோடு போட்டுட்டு இந்த கோட்டை அழிக்கமா சின்னதா ஆக்கணும் அப்படினு சொல்லுறாரு..
அங்க இருக்குறவங்க எல்லாருக்கும் ஒரே குழப்பம்.., அது எப்படி முடியும்னு பேசிட்டு இருகாங்க. ஆனா அவரு பொறுமையா வந்து அந்த கோடு மேல பெரிய கோட்டை போட்டு..
இப்போ பாருங்க ராஜா நீங்க சொன்ன மாதிரி அந்த கோடு அழிக்கவே இல்ல அனா சின்னதா ஆகிடுச்சு அப்படினு சொல்லுறாரு
ராஜாவும் சரி அப்படினு சொல்லி இன்னொரு டாஸ்க் கொடுக்குறாரு கையை எடுக்காம பத்து ஸ்டார் போடனு அப்படினு சொல்லுறாரு அதையும் இவரு பண்ணிறாரு .
இதுல இருந்து என்ன புரியுதுனா ஒரு விஷயம் நம்பளால எப்படி பண்ண முடியும்னா யோசிக்குறத விட அத எப்படி பண்ணா ஜெயிக்க முடியும் அப்படின்னு திங் பண்ணுங்க கண்டிப்பா வாழ்க்கையில வெற்றி பெற முடியும்.
Discussion about this post