குலதெய்வம் வீட்டிற்கு வர இதை செய்தால் போதும்..!! குலதெய்வ வழிபாடு..!!
ஆடிமாதம் என்றாலே அம்மன் சுவாமிகளுக்கு மிகவும் விசேஷமான மாதம் இந்த மாதம் அனைத்து அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் திருவிழாக்கள் மிக சிறப்பாக இருக்கும். இந்த ஆடி மாதத்தில் மட்டும் சிவனின் சக்தியை விட அம்மன் சக்தி அதிகமாக இருக்கும் என்பது ஐதீகம்.
குலதெய்வம் வழிபாடு :-
ஆண்டிற்கு ஒரு முறையாவது குலதெய்வம் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும்.., முக்கியமாக ஆடி மாதம். ஆடி மாதத்தில் குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியம் ஆடி வெள்ளி அன்று நாம் வழிபாடு செய்யும் இஷ்ட தெய்வத்தின் ஆசிர்வாதம் முழுவதுமாக கிடைக்க வேண்டும் என்றால், ஆடி வெள்ளி அன்று குலதெய்வத்தை வழிபட வேண்டும்.
ஆடி அமாவாசை ஒன்று ஒரு சிலர் குலதெய்வம் கோவிலுக்கு செல்லுவார்கள்.., குலதெய்வம் என்பவர்கள் நம் குலத்தை காக்கும் ஒரு தெய்வம் , ஒரு சிலருக்கு வெளி ஊரில் அவரின் குலதெய்வம் இருப்பார்கள். அங்கு சென்று எப்படி வழிபடுவது என நினைப்பவர்கள்.., குலதெய்வத்தை வீட்டிலேயே வணங்கலாம்.
வீட்டில் குலதெய்வம் வழிபாடு :-
குலதெய்வத்தின் புகை படத்தை வீட்டில் வைத்து இருப்பவர்கள் ஆடி வெள்ளி அன்று குலதெய்வத்தின் படத்தை சுத்தம் செய்து.., மஞ்சள் குங்குமம் இட்டு, பூக்கள் கொண்டு அலங்கரிக்க வேண்டும். பின் நைவேத்தியமாக சர்க்கரை பொங்கல் வைத்து படையல் இட வேண்டும்.
ஒரு சிறு அகல் விளக்கை குலதெய்வம் படத்தின் முன் ஏற்றி வைத்து., தீப ஆராதனை காட்ட வேண்டும். முக்கியமாக பக்தி பாடல் ஒலிக்க வேண்டும்.
ஒரு மஞ்சள் துணியை சிறு துண்டாக கிழித்து அதில் ஒரு ரூபாய் வைத்து முடிந்து வைக்க வேண்டும். இவ்வாறு வழிபட்டால் வீட்டில் செல்வம் செழிக்கும்.., திருமணம் ஆன பெண்கள் இந்த வழிபாட்டை செய்தால் தீர்க்க சுமங்கலி பாக்கியம் கிடைக்கும். என்பது ஐதீகம்.
மேலும் இதுபோன்ற பல ஆன்மீக தகவல்கள் பற்றி தெரிந்துக்கொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..