கல்லூரியில் இனி இது கட்டாயம்..!! பீதியில் ஸ்டூடெண்ட்ஸ்..!!
பெண்களைக் கேலி செய்தல் தடை சட்டம், ஜூலை 30, 1998ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. பொது இடங்களில் பெண்களைக் கேலி செய்வதைத் தடுப்பதற்காக இந்தச் சட்டம் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது. மசோதா எண் 53 மூலம் தமிழகத்தில் சுதந்திர இந்தியாவின் 49ஆவது ஆண்டில் நிறைவேற்றப்பட்டது.
இந்த திட்டம் குறித்து 1958ம் ஆண்டு இந்தியாவிற்கு அமலில் எடுத்து வந்தவர் “இந்திரா காந்தி” அதன் பின் 1998ம் ஆண்டு தமிழகத்திற்கு கொண்டு வந்தவர் கருணாநிதி. என்பது நாம் தெரிந்துகொள்ள வேண்டிய ஒன்று.
கல்லூரி வாழ்க்கை என்றாலே ஓர் அழகான காலம் என்று சொல்லலாம்.., படங்களில் பார்பது போல நிஜவாழ்கையிலும் நண்பர்கள், காதல், வேலை என கிடைக்கும். ஆனால் அந்த கல்லூரி வாழ்கையில் அதே அளவிற்கு சிக்கல்களும் வருகிறது.
முக்கியமாக ராகிங் தொந்தரவு.., என்ன தான் ராகிங் செய்தால் தண்டனை என சட்டம் இருந்தாலும் இன்று வரை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுப்பதற்காக நம் தமிழக அரசு கொண்டு வந்த திட்டம் தான் “சட்ட நடவடிக்கை” இதனை நாம் நேரில் சென்றோ அல்லது கல்லுரியிலோ புகார் அளிக்க தேவையில்லை ஆன்லைன் ராகிங் இணையதளத்தில் பதிவிட்டு புகார் அளிக்கலாம்.
ஒரு பெண்ணுக்கோ அல்லது ஆணுக்கோ மனரீதியாகவோ அல்லது உடல் ரீதியாகவோ ஏற்படும் சிக்கல்களுக்கு இதில் தீர்வு உண்டு. குறிப்பாக இந்த இணையதளத்தில் நீங்கள் பதிவிடும் புகார்களுக்கு உங்களின் பெயர் வெளியாகாமல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.