சுயமாக முன்னேற இத செய்ங்க..! வெற்றி கட்டாயம்..!
தன்னை மேம்படுத்திக் கொள்ள சுய முன்னேற்றம் என்பது மிகவும் முக்கியமானது. அன்றாட வாழ்வில் பின்பற்றும் சிறிய பழக்கமானது வாழ்வில் பெரிய அளவில் வித்தியாசத்தை கொடுக்கும்.
அதிகாலையில் எழுதல்:
தினமும் அதிகாலை 4.30 மணி முதல் 6 மணிக்குள் எழுந்திருக்கும் பழக்கத்தை பெற்றிருக்க வேண்டும். இதனால் உங்களின் உடல், வாழ்க்கை மற்றும் நடத்தை மாறுவதை கண்கூடாக பார்க்கலாம்.
இதனால் காலையில் உங்கள் நேரத்தை வாக்கிங், யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றில் ஈடுபட்டு உடலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கலாம்.
தியானம்:
தினமும் காலையில் தியான பயிற்சி பழக வேண்டும் இதனால் மனம் அமைதியடைவதுடன், மன அழுத்தம், பதற்றம் போக்கி நிதானமான வாழ்க்கைக்கு உதவும்.
இதனை தினமும் கடைபிடிப்பதினால் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழலாம்.
டைரி எழுதுதல்:
தினமும் எழுந்து தியானம் செய்த பின்னர் சிறிது நேரம் ஒதுக்கி டைரி எழுதும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும்.
அந்த நேரத்தில் நீங்கள் வெற்றி பெற்றதையும் அன்றாடம் நீங்கள் சந்தித்த பிரச்சனைகள் பற்றியும் எழுதுதல் வேண்டும். இந்த பழக்கமானது பிற்காலத்தில் உங்களின் கடந்த கால பாதையை நினைவூட்டும் வகையில் இருக்கும்.
தண்ணீர் அதிகமாக குடித்தல்:
தினமும் காலையில் முதலில் எழுந்த உடனே ஒரு லிட்டர் முதல் அரை லிட்டர் வரையில் நீரை குடிக்க வேண்டும்.
எந்த இடமும் சென்றாலும் தண்ணீர் பாட்டலோடு சென்று தேவையான நீரை அருந்த வேண்டும்.
ஆக்டிவாக இருக்கவும்:
ஒவ்வொரு நாளும் உங்களை ஆக்டிவாக வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் நிதானமாகவும், மன அமைதியுடனும், கவனமாகவும் செயல்பட உதவும்.
இதனால் இரவில் தூக்கம் அதிகரித்து மன அழுத்தம் குறையும்.
புக்ஸ் படித்தல்:
நீங்கள் எந்த அளவிற்கு புத்தகம் வாசிக்கிறீர்களோ அந்த அளவிற்கு உங்களுடைய அறிவாற்றலை வளர்த்துக் கொள்கிறீர்கள்.
சீக்கிரம் உறங்குதல்:
அதிகாலையில் எழுந்திருப்பவர்கள் அன்றாட வேலைகளை முடித்துவிட்டு சீக்கிரம் உறங்குதல் என்பது முக்கியம்.
இரவில் சமூக வலைத்தளங்களை பயன்படுத்துதல் போன்ற தேவையற்ற செயல்களில் ஈடுபடாமல் நேரத்தோடு உறங்குதல் மிகவும் முக்கியம்.