உங்களை வெறுப்பவர்களையும் மதியுங்கள்..!
நமக்கு அனைவரையும் பிடிக்காததை போல, நம்மையும் அனைவருக்கும் பிடித்து விடாது. அப்படி, உங்களை பிடிக்காதவர்களை அமைதியாக்க சில வழிகள் உண்டு. அவை என்னென்ன தெரியுமா?
இது குறித்து பார்க்கலாம் வாங்க;
விமர்சனங்களை எதிர்கொள்வது என்பது அனைவருக்கும் கடினமான ஒன்று. ஆனால், ஒரு சிலர் நம்மை பற்றி கூறுவது விமர்சனமாக இருக்காது. நேரடி அட்டாக் போல இருக்கும். அப்படி கூறும் போது நமக்கு என்ன பேசுவது, என்ன கூறுவது என்பதே தெரியாது.
அவர்கள் அப்படி உங்களை வார்த்தைகளால் சுட்டெரிக்க பல காரணங்கள் இருக்கலாம். அவர்களை சைலண்டாக சைலன்ஸ் செய்ய சில வழிகள் இருக்கின்றன. அவை என்னென்ன தெரியுமா?
உங்களின் அடையாளத்தை உறுதிப்படுத்துங்கள்:
உங்களை பற்றி நீங்கள் ஆழமாக அறிந்து கொள்வது தான் உங்கள் தன்னம்பிக்கையை அதிகரிக்க வைக்கும். உங்களிடம் இருக்கும் தகுதிகள், பலம், நீங்கள் செய்திருக்கும் சாதனைகள் ஆகியவற்றை தினம் தினம் நினைத்து பார்க்கக் கொள்ள வேண்டும்.
உங்கள் மீது நீங்கள் வைத்திருக்கும் மரியாதையை உயர்த்த தினமும் முயற்சி செய்ய வேண்டும். உங்களை நீங்களே நன்றாக பார்த்துக்கொள்ளும் போது, உங்களுக்கே நீங்கள் யார் என்று தெரிந்து விடும் வேறு யாரோட விமர்சனமும் உங்களை பாதிக்கப்போவதில்லை.
மௌனத்தின் சக்தி:
மௌனமாக இருக்கும் ஒருவருக்கு அறிவு அதிகம் என கேள்விப்பட்டிருப்போம், இது பெரும்பாலான சமயங்களில் உண்மையாகவும் இருக்கலாம். அதனால் முகத்திற்கு முன் யாராவது உங்களை திட்டி மரியாதை குறைவாக பேசினால் அப்போது அமைதியாக அவர் கண்களையே பார்த்துக் கோண்டு இருங்கள்.
ஒரு வீணான வாக்குவாதத்தில் உங்கள் சக்தியை வீணாக்குவதற்கு பதில் மெளனமாக இருந்துவிடுங்கள். நெகடிவிட்டியை உங்களை சுற்றி இருக்க விடாதீர்கள்.
உங்கள் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்:
நீங்கள் நீங்களாக இருப்பதினால் உங்களை பெரும்பாலான கெட்ட நபர்களிடம் இருந்து விலக்கி வைக்க உதவுகிறது. இது, பிறர் உங்கள் மீது விமர்சனம் அனுப்பினாலும் அதிலிருந்து உங்களை தற்காத்துக் கொள்ள உதவும்.
நீங்கள் உங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கைத்தான் உங்களுக்கு கெட்டது நினைப்பவர்களிடம் இருந்து உங்களை விலக்கி வைக்கும். இது, உங்கள் மனநிலையை பலமாக்கவும் உதவும்.
உங்கள் வளர்ச்சி பேசட்டும்:
நீங்கள் பேசும் வார்த்தையை விட உங்களின் வளர்ச்சி மட்டுமே மற்றவர்களுக்கு அது பதிலடியாக அமையும். உங்களை நீங்களே தொழில் ரீதியாகவும் தனிப்பட்ட ரீதியாகவும் வளர்த்துக் கொள்ள வேண்டும்.
உங்களை விமர்சிப்பவர்கள் மீது கவனம் செலுத்தாமல் உங்கள் மீது அதிக கவனம் செலுத்துங்கள். இது, உங்களை ஒரு பெரிய மனிதராக மெருகேற்றும்.
– கவிப்பிரியா