தங்கம் உங்களுக்கு சேர…இந்த கோவிலுக்கு போய்ட்டு வாங்க…!
தங்கம் சேர வேண்டும் என்ற எண்ணம் யாருக்குத்தான் இல்லாமல் இருக்கிறது..? அதிலும் இப்போது அதனின் விலை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது, அதன் மதிப்பும் கூடிக்கொண்டேதான் இருக்கிறது.
பெண்களுக்கு பிடித்தமான பொருட்களில் இதுவும் ஒன்று. வாழ்க்கையில் நாம் நன்றாக உழைப்பதே இதுபோல நம்முடைய ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்காக தான்.
அனைவருக்கும் பிடித்தமான தங்க நகை சேர வேண்டி இந்த கோவிலுக்கு சென்று வழிபட்டு வேண்டிக்கொண்டு வந்தால் கண்டிப்பாக சேரும் என்று சொல்கிறார்கள்.
இத்தகைய வியக்கத்தக்க கோவில் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இருக்கும் இலுப்பூர் என்ற ஊரில் பல்லாயிரம் வருடங்களுக்கு பழமைவாய்ந்த ஸ்ரீ பொன்வாசி நாதர் அமைந்துள்ளார்.
இந்த ஸ்ரீ பொன்வாசி நாதரை வந்து வேண்டிக்கொண்டால் நமக்கு தொலைந்த நகையும் திரும்ப நம்மலை வந்து சேரும் என்பது நம்பப்படுகிறது.
மேலும் இந்த கோவிலுக்கு வருவோருக்கு திருமணத்தடை விலகும், குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
இங்குள்ள சிவபெருமானை ஸ்ரீ பொன்வாசி நாதர் எனவும், அம்பாளை பொன்னம்மாள் மற்றும் சொர்ணாம்பாள் என்றும் அழைக்கப்படுகிறார்கள். இந்த கோவில் குலசேகரபாண்டியன் மற்றும் சுந்தரப்பாண்டியனரால் கட்டப்பட்டது எனவே இது சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.
பட்டினத்தார் இந்த கோவிலில் சிவபெருமானை போற்றி பாடல்களை பாடியுள்ளார். மேலும் வராக முனிவர் இந்த கோவிலில் சிவபெருமானை நோக்கி தவம் புரிந்ததாக சான்றுகள் இருக்கிறது.
இங்கு இருக்கும் பொன்னம்மாள் தெற்கு நோக்கி நின்ற கோலத்தில் அருள் பாலிக்கிறார்.
இங்குள்ள சிவபெருமானை ஹேமவிருத்தீஸ்வரர் மற்றும் பொன்வளர்ச்சிநாதர் என்றும் அழைக்கப்பட்டார், இவரே நாளடைவில் மருவி பொன்வாசிநாதர் என்று அழைக்கப்படுகிறார்.
இந்த கோவிலின் தலவிருட்சமாக வில்வ மரமும் மகிழ மரமும் அமைந்துள்ளது.
நகை கடை தொடங்குபவர்கள் இங்குள்ள சிவபெருமானையும் தேவியையும் தட்டில் நகைகளை வைத்து முதலில் வழிபட்டுவிட்டு தான் பின் வியாபாரத்தை ஆரம்பம் செய்வார்கலாம். இதனால் அவர்களுடைய வியாபாரம் செழித்து வளரும் என்பதும் நகைகள் சேரும் என்றும் நம்பப்படுகிறது.
நகைகளை தொலைத்தவர்களும் இங்குள்ள சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டால் அவர்களுடைய நகை ஒரு மண்டலத்திற்குள் அவர்களுக்கு திரும்பவும் கிடைக்கும் என நம்புகிறார்கள்.