அவல் டயட் உணவு ரெசிபி..!
அவல் என்பது ஒரு பாரம்பரிய உணவாகும். அவலை வைத்து நாம் செய்யும் உணவு ஒரு டயட் உணவாகும். இதில் பழங்களை சேர்ப்பதினால் உங்களின் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.
தேவையான பொருட்கள்:
- 1 கப் அவல்
- 1 கப் தேங்காய் துருவல்
- தேவைக்கு நாட்டு சர்க்கரை
- 2 வாழைப்பழம்
- 4 ஏலக்காய்
செய்முறை:
முதலில் ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் அவலை சேர்த்து வறுத்துக் கொள்ள வேண்டும்.
அவல் என்பது சிவப்பு அல்லது வெள்ளை எதுவாக இருந்தாலும் பரவாயில்லை.
தேங்காயை துருவி தனியே வைக்கவும்.
வாழைப்பழத்தை நறுக்கிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் வறுத்த அவலை சேர்த்து அதில் நறுக்கிய வாழைப்பழத்தை சேர்க்க வேண்டும்.
பின் அதில் தேங்காய் துருவல், ஏலக்காய், நாட்டுசர்க்கரை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
அவ்வளவுதான் அவல் வைத்து ஒரு டயட் உணவு தயார்.
இதனை காலை மாலை என இருவேலைகளிலும் சாப்பிடலாம்.
இந்த உணவில் எண்ணெய் சேர்க்காமல் சமைத்தது. இதில் உங்களுக்கு பிடித்த என்ன பழம் வேணுமானாலும் நறுக்கிப்போட்டு சாப்பிடலாம்.
அவலுடன் ஆப்பிள், திராட்சை, வாழைப்பழம், மாதுளை, கொய்யா, அன்னாசிப்பழம் எதுவானாலும் சேர்த்துக் கொள்ளலாம்.