பாஜக பிரமுகரை கடத்தி அரசு பேருந்தில் அனுப்பிய கடத்தல் கும்பல்..!! விசாரணையில் வெளிவந்த பல திடுக்கிடும் தகவல்கள்..!!
குடியாத்தத்தில் பாஜக பிரமுகரை கடத்தி சென்று பணப்பறிப்பில் ஈடுபட்ட இரண்டு பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டதில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது..
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காந்தி நகர் பகுதியை சேர்ந்த டேவிட் சுகுமார் அதே பகுதியில் இன்ஃபினிட்டி எனும் உணவகம் நடத்தி வருகிறார். இவர் பாஜகவை சேர்ந்தவர். நேற்று முன்தினம் காந்திநகர் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த டேவிட் சுகுமாரை காரில் வந்த சில மர்ம நபர்கள் கடத்தி சென்றனர் கணவர் கடத்தபட்டது குறித்து மனைவி சுகுணா குடியாத்தம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்..
புகாரின் பேரில் குடியாத்தம் போலீசார் வாகன தணிக்கை செய்து வந்த நிலையில் வேலூர் திருப்பத்தூர் திருவண்ணாமலை உள்ளிட்ட மூன்று மாவட்ட காவல் துறையினரும் பாஜக பிரமுகரை கடத்திய மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருவதை அறிந்த கடத்தல் காரர்கள் பாஜக பிரமுகர் டேவிட் சுகுமாரை திருவண்ணாமலையில் இருந்து வேலூருக்கு செல்லும் அரசு பேருந்தில் அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த தகவல் அறிந்த குடியாத்தம் போலீசார் வேலூர் பேருந்து நிலையத்திற்கு சென்று டேவிட் சுகுமாரை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டத்தில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்த நபர்கள் கடத்தி மூன்று கோடி பணம் கேட்டு மிரட்டியதாக விசாரணையில் தெரியவந்தது.
இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதியை சேர்ந்த வெங்கடேசன் (23வயது) மணிகண்டன் (வயது22) இருவரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கடத்தல் காரர்கள் கூறியதாவது., உதவி என்று கேட்டால் மக்களுக்காக செய்வதில்லை, ஆனால் மக்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்துகொள்ள மட்டும் வருவதால் மக்களின் நிலை என்னவென்று அரசியல்வாதிகளுக்கு தெரிய வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த கடத்தல் நடத்தப்பட்டதாகவும்., பணம் கேட்டு மிரட்டவில்லை என்றும் கடத்தல் கும்பல் தெரிவித்துள்ளனர்..
மேலும் கடத்தலில் முக்கிய குற்றவாளிகள் இரண்டு பேரை குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில் இரண்டு தனிப்படைகளை அமைத்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.
பணத்திற்காக பாஜக பிரமுகரை கடத்தி மீண்டும் காவல்துறையினருக்கு பயந்து பேருந்தில் டேவிட் சுகுமாரை அனுப்பி வைத்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..