ஆண்களே இந்த அறிகுறிகள் இருந்தால் ஜாக்கிரதை…!
ஆண்களுக்கு இது மாறி அறிகுறிகள் இருந்தால் அலட்சியமாக இல்லாமல் உடனே மருத்துவரை அணுக வேண்டும். அவை என்னவென்று இப்போ பார்க்கலாம்.
ஆஸ்துமா, நுரையீரல் புற்றுநோய், நுரையீரல் அலர்ஜி போன்றவற்றால் மூச்சுதிணறல், இருமல், சளி, சுவாச கோளாறுகள் ஏற்ப்படலாம்.
திடீரென மார்பில் வலி காணப்படுவது இதய நோயின் அறிகுறியாக இருக்கும். மார்வு வலி, மூச்சுதிணறல் ஆகியவை மாரடைப்பு, இதய பலவீனம் போன்ற நோயால் ஏற்ப்படலாம்.
சர்க்கரை வியாதி, தைராய்டு, ரத்த சோகை போன்றவற்றால் திடீரென உடல் எடை அதிகரித்தல், உடல் எடை குறைதல் ஆகியவை ஏற்ப்படலாம்.
உடலில் அளவுக்கு அதிகமாக சோர்வு இருத்தல், பலவீனம், அன்றாட வேலைகளை செய்ய முடியாமல் போதல் ஆகியவை தைராய்டு, ரத்த சோகை, சத்துக்களின் குறைபாடுகளால் உண்டாகலாம்.
வயிற்று வலி, வாந்தி, குமட்டல், மலச்சிக்கல் ஆகியவை செரிமான பிரச்சனைகளாக இருக்கலாம். இரைப்பையில் புண், உணவு ஒவ்வாமை, குடல் அழற்சி ஆகியவற்றின் அறிகுறிகள் இவை அனைத்தும்.
அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீரை கழிக்கும்போது வலி, வீக்கம், இரவில் அடிக்கடி சிறுநீர் வருதல் ஆகியவை சிறுநீர் கற்கள், சிறுநீரக தொற்று, புற்றுநோயின் அறிகுறிகளாக இருக்கலாம்.
தோலில் திடீரென மாற்றம், அரிப்பு, தேமல், வீக்கம் போன்றவை ஏற்ப்பட்டால் அலட்சியமாக இருக்க கூடாது. சருமத்தில் உண்டாகும் திடீர் மச்சம், புண், நிறம் மாறுதல் ஆகியவை புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
தேவையான தூக்கம் இல்லாமல் அன்றாடம் சோர்வாக இருப்பது நம் அன்றாட வேலைகளில் கவனம் செலுத்த விடாது. இது மன அழுத்தம், பதட்டம், மனதில் சோர்வு போன்ற காரணங்களால் வரக்கூடும்.