சென்னை திரும்ப இது தான் காரணமா..? பாதி தான் நடந்தது மீதி..?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் ஓய்வெடுப்பதற்காக ஐந்து நாள் சுற்றுப்பயணம் சென்றிருந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்று சென்னை திரும்பவுள்ளார்.., ஐந்து நாள் பயணத்தை முன்னதாக முடிக்க காரணம் குறித்து அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த 29ம் தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானல் சென்றார். பின் அங்கிருந்த ஒரு நட்சத்திர விடுதியில் தனது குடும்பத்தினருடன் அங்கு தங்கியிருந்தார்..
இந்நிலையில் கடந்த 29ம் தேதி முதல் மே 4ம் தேதி வரை 5 நாட்கள் கொடைக்கானலில் தங்கி ஓய்வு எடுக்க நினைத்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது பேத்தியுடன் உற்சாகமாக விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவியது.
முதலமைச்சரின் வருகையையொட்டி நட்சத்திர ஏரி, பிரையண்ட் பூங்கா, குணா குகை உள்ளிட்ட இடங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.. அதே சமயம் அவரை அங்கு சந்திக்க கட்சி உறுப்பினர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது.
ஆனால் அதே சமயம் பொதுமக்கள் முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.
இந்நிலையில் கொடைக்கானலில் திட்டமிட்ட படி முதலமைச்சர் ஸ்டாலின் சுற்றுலா தளங்களுக்கு சென்று பார்வையிடுவார் என அனைவரும் எதிர்பார்க்க பட்டிருந்த நிலையில் பாதி இடங்களுக்கு மட்டுமே சென்று மேற்பார்வையிட்டார்.
அதாவது குணா குகை சென்று, பூங்கா செல்வார் என எதிர் பார்த்திருந்த நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலுக்கு பின் இருந்த படகு இல்லத்தில் படகு சவாரியும் கால்ஃப் மைதானத்தில் விளையாட்டும் மட்டுமே விளையாடினார்.
கொடைக்கானலுக்கு ஓய்வு எடுக்க சென்றாலும்.., அங்கும் மக்களின் நிறைகுறைகளை கேட்டறிந்து அதனை விரைவில் செய்து தருவோம் என நம்பிக்கை தெரிவித்தார்..,
எனவே கொடைக்கானல் மக்களின் குறைகளை கேட்டறிந்த முதல் அமைச்சர் ஸ்டாலின் மக்களின் குறைகளை விரைவில் செய்து முடிப்பதற்காகவும், அதே சமயம் இது போன்ற பல்வேறு மாவட்டங்களில் உங்களின் மக்களின் குறைகளை கேட்டு நிரைவேற்றுவதற்காகவும் முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை திரும்புவதாக தகவல் வெளியாகியுள்ளது.
கொடைக்கானலில் 4 நாட்கள் ஒய்வு எடுத்துவிட்டு பின் இன்று சென்னை திரும்ப உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், கொடைக்கானலில் இருந்து காரில் மதுரை விமானநிலையம் வந்து அங்கிருந்து சென்னை வர இருக்கிறார். முதலமைச்சர் ஸ்டாலின் வருகையையொட்டி சென்னையில் பாதுக்காப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..