பாலியல் குற்றச்சாட்டுக்கு மோடி உறுதுணை..!! ஜோதிமணி விமர்சனம்..!
வடமாநிலங்களில் பாஜக மற்றும் பிரதமர் மோடிக்கு எதிராக மக்கள் குரல் கொடுப்பதை நம்மால் பார்க்க முடிகிறது என்றும் பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக உறுதுணையாக இருப்பதாகவும் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி பேட்டி அளித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் வாக்குபதிவு தமிழ்நாடு மாற்று புதுச்சேரியில் கடந்த மாதம் 19ம் தேதி நடைபெற்றது.., அதனை தொடர்ந்து மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஸ்டார்ங் ரூமில் வைத்து இராணுவப்படை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கரூர் காங்கிரஸ் நாடாளுமன்ற வேட்பாளர் ஜோதிமணி திடீர் ஆய்வு மேற்கொண்டார்., அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,
கரூர் நாடாளுமன்ற தொகுதியில் பாதுகாப்பு பணிகள் பலமாக தீவிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் 400 தொகுதியிலும் இந்திய கூட்டணி வெற்றி பெரும்.
முக்கியமாக வடமாநில பகுதிகளில் பாஜக சார்பில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர், ஆனால் அங்கு பிரதமர் மோடிக்கு எதிரான சூழல் நிலவி வருகிறது. அதற்கு காரணம் இதுவரை அவர் செய்த சாதனைகள் குறித்து பேசாமல் இஸ்லாமிய மக்களை இழிவுபடுத்தி பேசியுள்ளார்.
விவசாயிகளுக்கு என்று இதுவரை அவர் எதுவும் செய்யவில்லை.., இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கூட ஏற்படுத்தி தரவில்லை. பெண்களுக்கான அநீதி முதல் விவசாயிகளுக்கான அநீதி வரை பாஜாகாவை பற்றி பட்டியலிட்டு சொல்லலாம்..
இளைஞர்கள் குறிப்பாக படித்துமுடித்து விட்டு வேலையில்லாமல் வீட்டில் இருக்கின்றனர்.., ஒவ்வொரு இளைஞரும் தங்களின் கைககளில் காங்கிரஸ் துண்டு பிரசுரங்களை வைத்திருக்கிறார்கள்.., அந்த அறிக்கைகளை செய்தியாளர்கள் முன்னும் காட்டுகிறார்கள்..,
காங்கிரசின் தேர்தல் அறிக்கையின் படி விவசாயிகளுக்கான நீதி, இளைஞர்கள் நீதி, மாணவர்களுக்கான நீதி ஒவ்வொன்றும் தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் பிரஜ்வல் ரேவண்ணா 300கும் மேற்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளார்.. இதுவரை 3000க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாகவும் தகவல் வெளியானது.,
இதுபோன்ற வேட்பாளர் குறித்து அவரது கார் ஓட்டுநர் கார்த்திக் என்பவர்
பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்திற்கு இதுபற்றி தெரிவித்துள்ளார். இது தெரிந்தவுடன் பாஜக பிரஜ்வல் ரேவண்ணா மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.., ஆனால் பாரதிய ஜனதா அவர்களுக்கு சீட் கொடுத்தது மட்டும் இல்லாமல். பாலியல் குற்றச்சாட்டில் உள்ள நபர்களுக்கு பாஜக மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உறுதுணையாக உள்ளனர்.
3000- க்கும் மேற்பட்ட வீடியோக்கள் இருப்பதாக சொல்லப்படும் நிலையில்.., இந்த சம்பவம் தொடர்பாக நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பிரதமர் மோடி ஒரு வார்த்தை கூட கண்டிக்காமல் இருக்கிறார்.
பா.ஜ.க எம்.பி-க்கள் மீது பல பாலியல் வழக்குகள் உச்ச நீதிமன்றம் தலையிட்டு நடவடிக்கை எடுத்துள்ளது. அப்போதும், பா.ஜ.க அவர்களுக்கு ஆதரவாக இருந்தது தற்போது எழுந்துள்ள பிரச்னையிலும் பா.ஜ.க பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளானவருக்கு ஆதரவாக உள்ளது” என்றார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..