வயநாட்டை தொடர்ந்து ரபேலில் களம் இறங்கிய ராகுல் காந்தி..!! அமேதியை கை விட காரணம்..!!
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் உத்தரப்பிரேதசம் மாநிலம் ரேபரேலி மற்றும் அமேதி தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்கள் களமிறங்க போவதாக அக்கட்சியின் வேட்பளாரும் பொதுச்செயலாளரும் ஆன வேணுகோபால் கூறியிருந்தார்.., அவர் சொன்னதை போலவே ராகுல்காந்தி களம் இறக்கப்பட்டுள்ளார்..
இதற்கு முன் கேரளா வயநாடு தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கிய ராகுல் காந்தி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.., ஏப்ரல் 26ம் தேதி கேரளாவில் வாக்குபதிவு நிறைவு பெற்றதை தொடர்ந்து ஏப்ரல் 27ம் தேதி உத்திரபிரதேசத்தில் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டு இன்றுடன் நிறைவு பெறுகிறது.
இந்த சமயத்தில் காங்கிரஸ் சார்பில் ரேபரேலி தொகுதியில் போட்டியிடும் ராகுல்காந்தியை எதிர்த்து கிஷோரி லால் சர்மாவும் வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தப்பட்டனர்..,
கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமேதி மற்றும் கேரளா மாநிலம் வயநாடு ஆகிய இரண்டு தொகுதியிலும் போட்டியிட்ட காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்..
உத்தர பிரதேசத்தில் உள்ள அமேதி, ரேபரேலி ஆகிய இரண்டு தொகுதியிலும் தற்போது காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. ஆனால் கடந்த தேர்தலில் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வியடைந்தது பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது என காங்கிரஸ் கட்சியினர் தெரிவித்துள்ளனர்..
அதே சமயத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சோனியா காந்தி, தற்போது மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால், சோனியாகாந்தி போட்டியிட்ட அதே தொகுதியில்., இந்த முறை ராகுல் காந்தி களமிறக்கப்பட்டுள்ளார்..
இதனால் இந்த முறை ராகுல் காந்தி நிச்சயம் வெற்றி பெறுவார். என அக்கட்சி நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
அதே சமயம் ராகுல் காந்தி வயநாடு மற்றும் ரேபரேலி ஆகிய இரு தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றால். ஏதேனும் ஒரு தொகுதியில் அவர் ராஜினாமா செய்ய வாய்ப்புகள் இருப்பதாகவும் மற்றொரு தொகுதியில் மீண்டும் இடைத்தேர்தல் நடக்கும் எனவும் அரசியல் வட்டாரத்தில் சிலர் பேசி வருகின்றனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..