ஓடிசா ரயில் விபத்திற்கு இது தான் காரணமா..!! நடவடிக்கை எடுக்குமா அரசு..?
2017..18 ம் ஆண்டுகளில் இந்திய ரயில்வேயின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்த 1 இலட்சம் கோடி ரூபாய்களை மோடி அரசு இதுவரை பயன்படுத்தவில்லை என்று சிஏஜி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளது.
இந்த நிதியை பயன்படுத்தி இருந்தால் இந்திய இரயில்வேயில் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்து இருக்கலாம் என்று அது மேலும் கருத்து தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் எலக்ட்ரானிக் இன்டர் லாக்கிங் சிஸ்டத்தில் குறைபாடுகள் இருப்பதாக நிர்வாகம் ரயில்வே ஃபோர்டுக்கு அறிவுரை வழங்கிய நிலையில் இரயில்வே அமைச்சகம் என்ன செய்தது என்கிற கேள்விக்கு இதுவரை எந்தவொரு பதிலும் இல்லை.
இறந்துபோன பொதுமக்களின் எண்ணிக்கை அரசு அறிவிப்பு செய்ததை விட பன்மடங்கு இருக்கலாம் என்கின்றனர் பல நிபுணர்கள். ஆனால் இந்த கொடூரமான நிகழ்வுகளுக்கு அரசு இன்னும் பொறுப்பு ஏற்கவில்லை.
உலகில் உள்ள 190 நாடுகளில் எளிமையாக தொழில் தொடங்கும் நாடுகளில் 190 இடத்தை வசிக்கும் இந்தியாவிற்கு தற்போது தேவை வளர்ச்சி. அந்த வளர்ச்சியை நாம் கிராமப்புறங்களில் இருந்து தொடங்க வேண்டும். சிறிய ரயில்வே நிலையங்களில் கட்டமைப்பு, ஆளில்லா லெவல் கிராசிங் சரி செய்தல், ஜிபிஸ், ஏடிஎஸ் மற்றும் வயர்லெஸ் கனெக்சன், கொலியேஷன் டிவைஸ் , இன்டர் லாக்கிங் சிஸ்டம் இதுபோன்ற விவகாரத்தில் அரசு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அப்படி எடுத்து கொண்டால் அடிமட்டத்தில் இருந்தே இந்திய ரயில்வேயின் தரம் மற்றும் பாதுகாப்பு எல்லா வகையிலும் உறுதி செய்யப்பட்ட ஒன்றாக மாறும் .
ஆனால் நமது மோடியின் அரசு இதற்கான நிதி ஆதாரங்களை பயன்படுத்தி சீர்திருத்த நடவடிக்கைகளை தொடங்க தயாராக வில்லை. முதல் படி தாண்டாமல் வந்தே பாரத் ரயில் தொடங்கி வைப்பதில் தான் அவர் கவனம் செலுத்தி வருகிறார்.இதன் மூலம் இந்தியாவை மோடி சர்வதேச தரத்தில் உயர்த்தி விட்டதாக மாய கட்டமைப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது.இதுவரை 19 வந்தே பாரத் ரயில் பயன்பாடுகளில் வந்துள்ள நிலையில் ஏழை எளிய மக்கள் அதிகம் பயணிக்கும் நகர்புறம் மற்றும் கிராம தொடர்புடைய இரயில்வே தடங்களில் எந்தவொரு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பது சிஏஜி அறிக்கை மட்டும் குற்றச்சாட்டுகள் மூலம் நிரூபணம் ஆகியுள்ளது .
இருந்த போதிலும் மோடியை தேசத்தின் ஹிரோவாக உயர்த்தி காட்ட முயற்சி செய்வது இரண்டரை மணி நேரத்தில் காட்சிப்படுத்தப்படும் சினிமா தனங்களை எல்லாம் எல்லாவகையிலும் மிஞ்சி விட்டது என்பதே யாதார்த்தமான உண்மையாகும்..!