ஹீரோயின்கள் போல் நீங்களும் அழகாக தெரிய இதை ட்ரை பண்ணுங்க..!!
முகம் என்றும் பளபளப்பாக இருக்க நம் சில க்ரீம், மாய்ஸ்ரைசர் பயன் படுத்துவது உண்டு. சிலருக்கு சினிமா நடிகைகள் போல என்றும் அழகாக முகம் ஜொலிக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அவர்கள் அதற்கு விலை உயர்ந்த ப்யூட்டி ப்ரோடுக்ட்கள் பயன் படுத்துவாரகளா என்று நீங்கள் நினைத்துக்கொண்டு இருக்கலாம்.
ஆனால் அவர்களும் இந்த எளிய டிப்ஸை தான் கடைபிடிக்கின்றனர்..
நெல்லிக்காய் : தினமும் காலை ஒரு நெல்லிக்காய் ஜூஸ் குடித்தால் உடலில் உள்ள கெட்டகொழுப்பை அகற்றுவதோடு.., சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையையும் நீக்கிவிடும். எனவே தினமும் காலை ஒரு நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது நல்லது.
கறிவேப்பிலை : வாரத்திற்கு இருமுறை கறிவேப்பிலை சாதம், சாப்பிட்டு வந்தால் கூந்தலும் கருமையாகும். முகத்தில் உள்ள பிளாக் மார்க்ஸ் நீங்கி விடும்.
கற்றாழை ஜெல் : கற்றாழை ஜெல்லை எடுத்து குளிப்பதற்கு அரை மணி நேரத்திற்கு முன், தலையில் தடவி ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவினால், கூந்தல் என்றும் ஸ்மூத் ஆக இருக்கும்.
பாலாடை மாஸ்க் : பாலாடையை எடுத்து அதில் சிறிதளவு மஞ்சள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து முகத்தில் தடவ வேண்டும்.
வாரத்திற்கு இரண்டு முறை இப்படி செய்தால் முகம் பொலிவுடன் இருக்கும். நேரம் இருப்பவர்கள் தினமும் பயன் படுத்தலாம்.
அன்னாசி : முகப்பரு தழும்பு மற்றும் கரும்புள்ளி உள்ள இடத்தில் அன்னாசி பழத்தை துண்டாக நறுக்கி, முகத்தில் வைத்தால் முகப்பரு மறைந்து விடும்.
அன்னாசி சாறு மற்றும் தயிர் சேர்த்து தலையில் தடவி வந்தால் கூந்தல் உதிர்வு நின்று விடும்.
மேலும் இதுபோன்ற பல அழகு குறிப்புகள் பற்றி தெரிந்துகொள்ள தொடர்ந்து படித்திடுங்கள்..
Discussion about this post