மொபைல் போன்களில் காஸ்ட்லி என்றால் ஐபோன் என்று சொல்லலாம். உலகின் அதிக வருவாய் மற்றும் சந்தை மூலதனம் கொண்ட நிறுவனமான ஆப்பிள் இந்த ஐபோன்களை உற்பத்தி செய்கிறது. ஐபோன் 14 சமீபத்தில் பிரபலமானது. தோற்றத்தைப் பொறுத்தவரை, இது முந்தைய ஆண்டு ஐபோன் 13 ஐப் போலவே உள்ளது, ஆனால் இது நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. தற்போது சிறப்பு சலுகையுடன் இந்த ஐபோன் 14 போனை வாங்க நல்ல சான்ஸ் கிடைத்துள்ளது.
இந்தியாவின் முன்னணி ஆன்லைன் இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் அதிரடி சிறப்பு விலையில் ஐபோன் விற்பனையை அறிமுகப்படுத்தியுள்ளது. 5 நாட்கள் நடக்க உள்ள “பிளிப்கார்ட் பிக் சேவிங் டேஸ்” விற்பனையில் Realme, Vivo, Poco, Samsung, Apple மற்றும் பிற மாடல் ஸ்மார்ட்போன்கள் மீது அசத்தலான தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
79,900 ரூபாய் மதிப்பிலான ஐபோன் 14 பேசிக் மாடல் 128 ஜிபி வெர்ஷன் பிளிப்கார்ட்டில் வெறும் ரூ.66,999 கிடைக்கிறது. இதனால் ஐபோன் வாங்க காத்திருப்போர் 13 ஆயிரம் ரூபாயை சேமிக்க முடியும். 256 ஜிபி ஐபோன் 14 மாடல் 76,999 ரூபாய்க்கும், 512 ஜிபி 96,999 ரூபாய்க்கும் கிடைக்கிறது.
ஆப்பிள் சமீபத்தில் மஞ்சள் நிற ஐபோனை அறிமுகப்படுத்தியது. இது பல வண்ணங்களைக் கொண்டுள்ளது. மிட்நைட், பர்பிள், ஸ்டார்லைட், தயாரிப்பு சிவப்பு, நீல வண்ணங்களில் கிடைக்கிறது.
இந்த ஸ்மார்ட்போன் 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது. ஸ்மார்ட் போன் ஸ்கிரீன் ரெசல்யூஷன் 2532×1170 பிக்சல்கள் ஆகும்.
12 எம்பி பிரைமரி சென்சார் மற்றும் 12 எம்பி அல்ட்ராவைட் சென்சார் உள்ளது. மேலும் Flipkart Big Savings Days.. மார்ச் 15 வரை மட்டுமே உள்ளது. சிறப்பு தள்ளுபடி விற்பனை முடிய இன்னம் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் உடனே முந்துங்கள்…
Discussion about this post