ஆஸ்திரேலியாவில் T20i உலகக்கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணி நாளை நெதர்லாந்தை எதிர்த்து விளையாடவுள்ளனர். இதனால் தீவிரமா பயிற்சி பெற்றும் வருகின்ற நிலையில் வீரர்களுக்கு சரியான உணவு அளிக்கபடவில்லை என்று பிசிசிஐ கூறியுள்ளது.
பயிற்சிக்கு பிறகு சூடான உணவு அளிக்காமல் வேகாத காய்கறிகளை கொண்ட சான்ட்விச் மட்டுமே அளிக்கபடுவதாக வீரர்கள் புகார் அளித்துள்ளனர். மேலும் கூறுகையில், தங்கியிருக்கும் ஹொட்டேலுக்கும், பயிற்சி மைதானத்திற்கும் 60 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதால் தகுந்த உணவு கிடைப்பதில்லை என்று கூறியுள்ளனர்.கடும் குளிர் இருப்பதால் பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு சூடான உணவு அவசியம் என்றும் கூறியுள்ளனர்.
மதிய உணவு வேளைக்கு பிறகு வீரர்களுக்கு சூடான உணவு வழங்கும் நடைமுறை ஐசிசியில் இல்லை என்றும் பயிற்சி ஆட்டத்திற்கு பிறகு வீரர்களுக்கு சூடான உணவு அளிக்கபடும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளது. இச்சம்பவத்தால் ரசிகர்களிடம் சற்று பரபரப்பு ஏற்பட்டுள்ளது.