இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலம் வென்று சாதனை..!!
பாரிஸ் நகரத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ஒலிம்பிக் ஆடவர் மல்யுத்த போட்டியில் 57 கிலோ எடைப் பிரிவில் இந்திய வீரர் அமன் ஷெராவத் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்..
ஆடவருக்கான 57கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் அமன் ஷெராவத் வெண்கலப்பதக்கம் வெல்வதற்கான சுற்றில் 13-5 என்ற கணக்கு விகிதத்தில் பியூர்டோ ரிகோவின் டரியன் குரூஸை வீழ்த்தி வெற்றி பெற்றார்.. அதன் மூலம் அறிமுக ஒலிம்பிக்கிலேயே பதக்கம் வென்று அடுத்த தேர்வுக்கு தகுதி பெற்றார் தற்போது இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது..
ஒலிம்பிக் மல்யுத்தத்தில் இந்தியாவின் சாதனை :
1952ம் ஆண்டு ஹெல்சிங்கி கே.டி. ஜாதவ் வெண்கலம்..
2008ம் ஆண்டு பெய்ஜிங் சுஷில் குமார் வெண்கலம்…
2012ம் ஆண்டு சுஷில் குமார் வெள்ளி பதக்கம்
2012ம் ஆண்டு யோகேஷ்வர் தத் வெண்கலம்
2016ம் ஆண்டு ரியோ டி ஜெனீரோ சாக்ஷி மாலிக் வெண்கலம்
2020ம் ஆண்டு டோக்கியா ரவிக்குமார் தாஹியா வெள்ளி
2020ம் ஆண்டு டோக்கியோ பஜ்ரங் புனியா வெண்கலம்
2024ம் ஆண்டு பாரீஸ் அமன் ஷெராவத் வெண்கலம்..