INDIA vs NDA கூட்டணி..! 12 மாநிலங்கள் எந்த கூட்டணியில் ஆதரவு..!
இந்தியாவின் ஜனநாயக திருவிழாவான நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது. 28 மாநிலங்களின் தொகுதிகளிலிருந்தும், 8 யூனியன் பிரதேசங்களின் தொகுதிகளிலிருந்தும் 543 நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில், 8,337 வேட்பாளர்கள் போட்டியிட்ட நிலையில் அதைத் தொடர்ந்து நேற்று தேர்தல் முடிவுகள் வெளியானது.
இந்திய அரசியலைப் பொறுத்தவரையில் குறிப்பிட்ட 12 மாநிலங்களின் தேர்தல் முடிவே மத்தியில் யாருடைய ஆட்சி என்பதை முடிவு செய்யும்.
350 தொகுதிகளில் வெற்றி பெறுவோம் என நினைத்த பாஜக வெறும் 240 தொகுதிகளில் மட்டுமே கூட்டணியுடன் வெற்றி பெற்றது. காங்கிரஸ் தன்னிச்சையாக 99 இடங்களிலும் கூட்டணியுடன் சேர்ந்து 232 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியாத சூழலில் பாஜகவும் காங்கிரஸும் இருப்பதால் இதர கட்சிகளின் ஆலோசனை கேட்ட பின் அவர்களின் ஆதரவு யாருக்கு என சொன்ன பின்னரே யார் பிரதமர் என அறிவிக்கப்படுவார்கள்.
எந்தக்கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை அமையாததால், ஆந்திரப் பிரதேசத்தின் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி 16 தொகுதிகளும், பீகாரின் நிதிஷ் குமாரின் 12 தொகுதிகளும், மற்றும் பிற கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மத்தியில் ஆட்சியமைக்கப்போவது யார்..? என்பதில் குழப்பம் நிலவி வருகிறது.
இந்நிலையில், 2019-ம் ஆண்டு பாஜக தலைமையிலான என்டிஏ கூட்டணியும், காங்கிரஸ் தலைமையிலான UPA கூட்டணியை போலவே, இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியும், என்.டி.ஏ கூட்டணி எந்த மக்களவை தொகுதியில் யார் எவ்வளவு வாக்கு விகிதத்தில் வெற்றி பெற முடியும் என்பது பற்றி பார்க்கலாம்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திமுக 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. திமுக தலைமையிலான கூட்டணியில், காங்கிரஸ், சிபிஐ, சி.பி.எம், வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. அதில் தி.மு.க கூட்டணி 38 தொகுதிகளைக் கைப்பற்றியது.
தி.மு.க, 32.7 சதவிகிதம் வாக்குகளும், காங்கிரஸ் கட்சி 12.76 சதவிகித வாக்குகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2.44 சதவிகித வாக்குகளும் பெற்று இரு இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 2.4 சதவிகித வாக்குகளும், வி.சி.க 1.18 சதவிகித வாக்குளும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 1.11 சதவிகித வாக்குளும், மதிமுக 1.32 சதவிகத வாக்குகளும் பெற்று வெற்றிபெற்றது.
என்.டி.ஏ கூட்டணியில் இருந்த அ.தி.மு.க 19.39 சதவிகித வாக்குகளை பெற்று ஓரிடத்திலும், பா.ஜ.க 3.66 சதவிகித வாக்குகளையும், பாட்டாளி மக்கள் கட்சி 5.42 சதவிகித வாக்குகளையும், தமிழ் மாநில காங்கிரஸ் 0.52 சதவிகித வாக்குகளையும் பெற்றன. ஆனால் ஓரிடத்தில்கூட வெற்றிப்பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
80 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம், 2019ம் ஆண்டு தேர்தலின்போது என்.டி.ஏ கூட்டணில் பா.ஜ.க., 49.5 சதவிகித வாக்குகளும், அப்னா தள் (சோனேலால்) கட்சி, 1.2 சதவிகித வாக்குகளும். அதேசமயம் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்துத் தேர்தலைச் சந்தித்த அகிலேஷ் யாதவ் தலைமையிலான சமாஜ்வாடி கட்சி, 17.96 சதவிகித வாக்குகளுடன் வெற்றி பெற்றது.
இந்த நாடாளுமன்றத் தேர்தலில், இந்தியா கூட்டணியுடன் இணைந்த சமாஜ்வாடி கட்சி 33.59 சதவிகித வாக்குகளும், காங்கிரஸ் 9.46 சதவிகித வாக்குகளும் பெற்று 6 இடங்களில் வெற்றி பெற்றது.
என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பாஜக 41.37 சதவிகித வாக்குகளும், ராஷ்ட்ரிய லோக்தளம் இரண்டு தொகுதிகளிலும், அப்னா தள் ஒரு தொகுதியிலும் வென்றது. கடந்த முறை 49.5 சதவிகித வாக்குகளைப் பெற்ற பாஜக இந்த முறை 41.37 சதவிகித வாக்குகளை தான் பெற முடிந்திது.
2019 மக்களவைத் தேர்தலில், 48 தொகுதிகள் இருக்கும் மகாராஷ்டிரா மாநிலத்தில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க 27.59 சதவிகித வாக்குகளைப் பெற்று, 23 இடங்களில் வென்றது. அந்தக் கூட்டணியில் அப்போது இடம்பெற்ற சிவசேனா கட்சி, 23.29 சதவிகித வாக்குகளுடன் 18 இடங்களில் வெற்றி பெற்றது.
இந்த நாடாளுமன்ற தேர்தலில், மகாராஷ்டிரா மாநிலத்தின் முக்கியக் கட்சியான சிவசேனாவும், தேசியவாத காங்கிரஸ் கட்சியும், இந்தியா கூட்டணி ஆதரவு உத்தவ் தாக்ரே அணி, சரத் பவார் அணி எனவும், என்.டி.ஏ கூட்டணி ஆதரவு ஏக்நாத் ஷிண்டே அணி, அஜித் பவார் அணி என இரண்டாகப் பிரிந்து தனித்தனியே தேர்தலை எதிர்கொண்டன.
இதில், இந்தியா கூட்டணி ஆதரவு சிவசேனா (உத்தவ் தாக்ரே அணி) 16.72 சதவிகித வாக்குகளைப் பெற்று, 6 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் (சரத் பவார் அணி) 10.27 சதவிகித வாக்குகளைக் கைப்பற்றி 8 இடங்களையும், காங்கிரஸ் 16.92 சதவிகித வாக்குகளைப் பெற்று 13 இடங்களிலும் வெற்றி பெற்றது.
என்.டி.ஏ கூட்டணி ஆதரவு சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே அணி) 12.95 வாக்குகளைப் பெற்று, 7 இடங்களையும், தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் அணி) 3.60 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்திலும், பாஜக 26.17 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ளது.
42 தொகுதிகள் இருக்கும் மேற்கு வங்கத்தில், மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 2019 தேர்தலில், 43.28 சதவிகித வாக்குகளுடன் 22 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் 5.61 சதவிகித வாக்குகளைப் பெற்று, இரு இடங்களில் வெற்றிபெற்றது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 6.28 சதவிகித வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.4 வாக்கு சதவிகித வாக்குகளையும் பெற்றது. ஆனால் ஓரிடத்தில்கூட வெற்றிபெறவில்லை.
என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க 40.25 சதவிகித வாக்குகள் பெற்று,18 இடங்களில் வெற்றிபெற்றது.
ஆனால், இந்த தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து இந்தியா கூட்டணியில் ஐக்கியமாகின. இதில், திரிணாமுல் மட்டும் தனித்துக் களம் கண்டது.
இந்த நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் 45.76 சதவிகித வாக்குகளைப் பெற்று, 29 இடங்களையும், காங்கிரஸ் 4.68 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்திலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 5.67 சதவிகித வாக்குகளையும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 0.22 சதவிகித வாக்குகளைப் பெற்றது. ஆனால் இரு கட்சிகளும் ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெறவில்லை. பாஜக 38.73 சதவிகித வாக்குகளைப் பெற்று 12 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
பீகாரின் 40 தொகுதிகளில் 2019-ம் ஆண்டு தேர்தலில் என்.டி.ஏ கூட்டணியில் பாஜக 23.58 சதவிகித வாக்குகளைப் பெற்று 17 இடங்களில் வென்றிருக்கிறது. நிதிஷ் குமாரின் JD(U) 21.81 சதவிகித வாக்குகளைப் பெற்று 16 இடங்களில் வென்றது. UPA கூட்டணியில் காங்கிரஸ் 7.7 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்தில் வென்றது. 15.36 சதவிகித வாக்குகளைப் பெற்ற லாலு பிரசாத் தலைமையிலான RJD, ஓரிடத்தில் கூட வெற்றிபெறவில்லை.
இந்த தேர்தலில், என்.டி.ஏ கூட்டணியில் பா.ஜ.க 20.52 சதவிகித வாக்குகளைப் பெற்று 12 இடங்களில் வெற்றிபெற்றுள்ளது.
நிதிஷ் குமாரின் JD(U) 18.52 சதவிகித வாக்குகளைப் பெற்று 12 இடங்களில் வெற்றிப்பெற்றிருக்கிறது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ் 9.20 சதவிகித வாக்குகளைப் பெற்று, 3 தொகுதிகளிலும், 22.14 சதவிகித வாக்குகளைப் பெற்ற RJD, 4 தொகுதிகளிலும் வெற்றியை உறுதி செய்திருக்கிறது.
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகள் இருக்கின்றன. கடந்த 2019-ம் ஆண்டு தேர்தலின்போது பா.ஜ.க 58 சதவிகித வாக்குகளைப் பெற்று, 28 இடங்களிலும் வென்றது. காங்கிரஸ் கட்சி 34.5 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்தில் மட்டுமே வெற்றிபெற்றது. அஇந்த தேர்தலில், பா.ஜ.க 59.27 சதவிகித வாக்குகளைப் பெற்று, 29 இடங்களிலும் வென்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சி 32.44 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
28 நாடாளுமன்றத் தொகுதிகளைக் கொண்டிருக்கும் கர்நாடகாவில், கடந்த முறை தேர்தலின்போது என்.டி.ஏ கூட்டணியில் பாஜக 51.38 சதவிகித வாக்குகள் பெற்று, 25 இடங்களில் வெற்றிபெற்றது. காங்கிரஸ் கட்சி 31.88 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஓரிடத்திலும், கடந்த முறை காங்கிரஸுடன் கூட்டணியிலிருந்த ஜனதா தளம் (மதச்சார்பற்ற) கட்சி 9.67 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.
குஜராத் மாநிலத்தில் மொத்தம் 26 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. சென்ற முறை 26 தொகுதிகளில் போட்டியிட்ட பாஜக, அனைத்துத் தொகுதிகளிலும் வென்று, 62.21 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.
26 தொகுதிகளிலும் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி 32.11 வாக்குகளைப் பெற்றது. ஆனால், ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த தேர்தலிலும் பா.ஜ.க 25 தொகுதிகளில் வெற்றிப்பெற்று, 61.86 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறது. காங்கிரஸ் ஒரு இடத்தில் மட்டும் வென்று 31.24 சதவிகித வாக்குகளை பெற்றிருக்கிறது.
இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியில் இடம் பெற்றிருக்கும் ராஷ்டிரீய லோக்தந்திரிக் கட்சி 1.80 சதவிகித வாக்குகளைப் பெற்று ஒரு இடத்தில் வெற்றி. காங்கிரஸ் 37.91 சதவிகித வாக்குகளை பெற்று 8 இடங்களில் வெற்றியை பதிவு செய்திருக்கிறது. சிபிஐ(எம்) 1.97 சதவிகித வாக்குகளைப் பெற்று, ஒரு இடத்தில் வென்றது. என்.டி.ஏ கூட்டணியில் இருக்கும் பா.ஜ.க 49.24 சதவிகித வாக்குகளை பெற்றுள்ளது.
ஆந்திரப் பிரதேசத்தின் 25 நாடாளுமன்றத் தொகுதிகளில், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில், ஜெகன் மோகன் தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.சி கட்சி 49.89 சதவிகித வாக்குகளைப் பெற்று 22 தொகுதிகளை கைப்பற்றியது. காங்கிரஸ் கட்சி கடந்த முறை, 1.29 சதவிகித வாக்குகளைப் பெற்று, எங்கும் வெற்றிபெறவில்லை.
தெலுங்கு தேசம் கட்சி 39.59 சதவிகித வாக்குகள் பெற்று மூன்று இடங்களில் வென்றது. பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 5.79 சதவிகித வாக்குகள் பெற்றும், பாஜக 0.96 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்தில் கூட வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலே குறிப்பிட்டிருக்கும் மூன்று கட்சிகளும் 2019-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் தனித்தனியே போட்டியிட்ட நிலையில், இந்த தேர்தலில் மூன்று கட்சிகளும் என்.டி.ஏ கூட்டணியில் ஒன்றாகக் களம் கண்டது.
இதில், தெலுங்கு தேசம் கட்சி 37.79 சதவிகித வாக்குகள் பெற்று 16 இடங்களிலும், பவன் கல்யாணின் ஜன சேனா கட்சி 2 இடங்களிலும், பா.ஜ.க 11.28 சதவிகித வாக்குகள் பெற்று 3 இடங்களிலும் வென்றிருக்கின்றன. கூட்டணியில் இடம்பெறாமல் தனித்து களம்கண்ட ஒய்.எஸ்.ஆர்.சி.பி 39.61 சதவிகித வாக்குகளைப் பெற்று 4 இடங்களில் மட்டும் வென்றிருக்கிறார். காங்கிரஸ் வெறும் 2.66 சதவிகித வாக்குகளை மட்டுமே பெற்றது. எதிலும் வெற்றிப்பெறவில்லை.
கேரள மாநிலத்தில் 20 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கிறது. கடந்த முறை UDF, NDA, LDF ஆகிய மூன்று கூட்டணிகளில் அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்தித்தன. UDF கூட்டணியில் காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி, கேரளா காங்கிரஸ் (மார்க்சிஸ்ட்) ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன.
NDA கூட்டணியில் பாஜக, பாரத தர்ம ஜன சேனா ஆகிய கட்சிகள் இடம்பெற்றிருந்தன. LDF கூட்டணியில் சிபிஎம், சிபிஐ, கேரளா காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இதில் இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி 25.83 சதவிகித வாக்குகளுடன் ஓரிடத்தில் வெற்றி பெற்றது.
காங்கிரஸ் 37.27 சதவிகித வாக்குகளுடன் 15 இடங்களில் வெற்றிபெற்றிருந்தது. இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 5.45 சதவிகித வாக்குகளுடன் இரு இடங்களிலும். புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி 2.45 சதவிகித வாக்குகளைப் பெற்று ஓரிடத்தில் வெற்றி பெற்றது.
கேரள காங்கிரஸ் (எம்) 2.07 சதவிகித வாக்குகளுடன் ஓரிடத்திலும். அதேபோல பா.ஜ.க 12.93 சதவிகித வாக்குகளைப் பெற்றும், பாரத தர்ம ஜன சேனா கட்சி 1.87 சதவிகித வாக்குகளைப் பெற்றும் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிட தக்கது.
இந்த தேர்தலில், இந்தியா கூட்டணியின் சிபிஐ (எம்) 25.82 சதவிகித வாக்குகள் பெற்று ஒரு தொகுதியிலும், காங்கிரஸ் 35.06 சதவிகித வாக்குகள் பெற்று 14 தொகுதிகளிலும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 6.07 சதவிகித வாக்குகள் பெற்று 2 தொகுதிகளிலும், கே.இ.சி, ஆர்.எஸ்.பி கட்சிகள் தலா ஒரு இடத்திலும் . பாஜக 16.68 சதவிகித வாக்குகளைப் பெற்று வெற்றிப் பெற்றுள்ளது.
தெலங்கானாவின் 17 நாடாளுமன்றத் தொகுதிகளில், 2019-ன் நாடாளுமன்றத் தேர்தலில், பாரத ராஷ்டிர சமிதி கட்சி 41.29 சதவிகித வாக்குகளைப் பெற்று, 9 தொகுதிகளில் வென்றது.
காங்கிரஸ் கட்சி 29.48 சதவிகித வாக்குகளைப் பெற்று 3 தொகுதிகளில் வெற்றிபெற்றது. பாஜக 19.45 சதவிகித வாக்குகளைப் பெற்று 4 தொகுதிகளில் வெற்றிகொண்டது. அசாதுதீன் ஒவைசியின் கட்சி ஓரிடத்தில் வென்று, 2.78 சதவிகித வாக்குகளைப் பெற்றது.
இந்த தேர்தலில், பாரத ராஷ்டிர சமிதி கட்சி 16.68 சதவிகித வாக்குகளைப் பெற்றும் எந்த தொகுதியிலும் வெற்றிப் பெறவில்லை. காங்கிரஸ் கட்சி 40.10 சதவிகித வாக்குகளைப் பெற்று 8 தொகுதிகளிலும், பா.ஜ.க 35.08 சதவிகித வாக்குகளைப் பெற்று 8 தொகுதிகளிலும். அசாதுதீன் ஒவைசியின் கட்சி 3.02 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..