இண்டியா கூட்டணி..! டெல்லி புறப்பட்ட முதலமைச்சர் ஸ்டாலின்..! தலைவர்கள் பங்கேற்பு..!
டெல்லியில் நடைபெறும் இண்டியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலை டெல்லி புறப்பட்டார். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி 232 இடங்கள் வெற்றி பெற்ற நிலையில். இன்று மாலை 6 மணிக்கு டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே இல்லத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் 40-க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், இண்டியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க இன்று டெல்லி சென்றுள்ளார். முன்னதாக நேற்று நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்து முடிந்த மக்களவை தேர்தலின் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு அதற்கான முடிவுகள் வெளியானது.
அதில் பாஜக தனித்து 240 இடங்களிலும் என்டிஏ கூட்டணி 293 இடங்களிலும், காங்கிரஸ் 99 இடங்களிலும், இண்டியா கூட்டணி 232 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
மேலும் டெல்லி, இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் பல தொகுதிகளில் கைப்பற்றியிருந்தாலும் உத்தரப் பிரதேசம், தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் பாஜக பெரும் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் மோடி பிரதமராக ஆட்சி அமைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பாஜக அதை தனக்கு சாதகமாக பயன்படுத்தி, நிதிஷ்குமார், சந்திரபாபு நாடு ஆகியோருடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைப்பதற்கான பேச்சுவார்த்தையில் நடத்தி வருகிறது. இவர்களின் கூட்டணி யாருடன் என்று முடிவு செய்த பிறகே யார் ஆட்சி அமைப்பது என்பது தொடர்பாக பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கூட்டணி கட்சிகளுடன் இன்று முக்கிய ஆலோசனை நடத்த உள்ளனர்.
– லோகேஸ்வரி.வெ
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..