பூண்டு வெண்ணெய் இறால் பாஸ்தா..!
தேவையான பொருட்கள்:
பாஸ்தா 100 கிராம்
இறால் 125 கிராம்
மைதா 3 ஸ்பூன்
வெண்ணெய் 3 ஸ்பூன்
பூண்டு 3
தண்ணீர் 1/4 கப்
கெட்டியான கிரீம் 2 ஸ்பூன்
உப்பு தேவையானது
மிளகுத்தூள் தேவையானது
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பாஸ்தா சேர்த்து அதில் தண்ணீர் ஊற்றி சிறிது எண்ணெய் விட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து வேகவைக்கவும்.
10 நிமிடம் கழித்து நசுக்கி பார்த்தால் பாஸ்தா நடுங்க வேண்டும் அந்த சமையத்தில் பாஸ்தாவில் உள்ள நீரை வடிகட்டி கொண்டு பாஸ்தாவை தனியே வைக்கவும்.
இறலை நன்றாக சுத்தம் செய்து அதில் உப்பு, மிளகுத்தூள், மைதா ஆகியவற்றை சேர்த்து கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு ஃபேனில் 1 1/2 ஸ்பூன் வெண்ணெய் விட்டு உருகியதும் அதில் இறாலை சேர்த்து இருபக்கமும் இரண்டு நிமிடங்களுக்கு வேகவைத்து தனியே எடுக்கவும்.
அதே ஃபேனில் மீதமுள்ள வெண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.
பின் இதில் தண்ணீர் மற்றும் கிரீம் சேர்த்து கலக்க வேண்டும்.
கெட்டியானதும் வேகவைத்த பாஸ்தா சேர்த்து கிளறி விட வேண்டும்.
தண்ணீர் நன்றாக சுண்டியதும் அடுப்பை அணைத்து பின் வறுத்த இறால், உப்பு மற்றும் சிறிது மிளகுத்தூள் தூவி கிளறி விட வேண்டும்.
அவ்வளவுதான் சுவையான பூண்டு வெண்ணெய் இறால் பாஸ்த தயார்.
இன்னிக்கு வீட்ல குழந்தைகளுக்கு செய்து கொடுங்க.