முன்னாள் அமைச்சர் மஸ்தான் மரண வழக்கில் அவரது உறவினர் இம்ரான் கூலிப்டையினரை வைத்து கொடூரமாக கொலை செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னாள் அமைச்சர் மாஸ்தான் அவரது உறவினர் இம்ரான் உடன் டிசம்பர் 21 ஆம் தேதி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது மாஸ்தானுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் இம்ரான் சேர்த்துள்ளார். ஆனால் மாஸ்தான் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனார்.
இந்த தகவல் அறிந்து வந்த போலீசார் முன்னாள் அமைச்சர் மாஸ்தான் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி பிரேத பரிசோதனைக்காக அவரது உடலை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன்பின் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதி அஞ்சலி செய்யப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர் மாஸ்தான் மரண வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. மாஸ்தானை மருத்துவமனையில் அனுமதித்த அவரது உறவினர் இம்ரானே கொலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.
மாஸ்தான் சகோதாரரின் மருமகன் தான் இம்ரான். மாஸ்தானுக்கும் இம்ரானுக்கும் இடையே பணம் கொடுத்தல் வாங்கலில் வாக்குவாதம் ஏற்ப்பட்டுள்ளது.
மஸ்தான் இம்ரானுக்கு 8 புள்ளி 50 லட்சம் ரூபாய் பணத்தை கடனாக வங்கி மூலம் பணபரிவர்த்தனை செய்து உள்ளார். இது மட்டுமில்லாமல் தனியாகவும் சில லட்ச ரூபாயை இம்ரான் கடனாக வாங்கியுள்ளார். இதனால் அவர்களுக்கு தகராறு இருப்பது உறவினர்கள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் பிரேத பரிசோதனை அறிக்கையில் மஸ்தான் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பது உறுதி செய்யப்பட்டது. நெஞ்சு வலி என்று இம்ரான் கூறிய நிலையில் மூச்சு திணறல் ஏற்பட்டு உயிரிழந்திருப்பதை அடுத்து கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் காவல்துறைக்கு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து போலீசார் இம்ரானிடம் தீவிர விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது, இம்ரான் செல்போனை ஆய்வு செய்துள்ளனர். அதில் மஸ்தானை கொலை செய்ய 4 பேரிடம் பேசியது தெரியவந்துள்ளது. அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதில் மஸ்தானை காரில் வைத்தே கொடூரமாக கொலை செய்ததது தெரிய வந்துள்ளது. கையை இரண்டு பேர் இருக்க பிடித்துக் கொண்டும் முகத்தையும் வாயையும் பொத்தி மூச்சு திணற திணற கொலை செய்திருப்பதும் விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.
பின்னர் நெஞ்சுவலி ஏற்பட்டது போல் நாடகமாடி உறவினர்களையும் காவல் துறையும் இம்ரான் திசை திருப்ப முயற்சி செய்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.