பிரதமர் மோடி அடிக்கடி வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை…!!
தமிழ்நாட்டில் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.., அதற்காக தேர்தல் பிரச்சாரம் செய்ய தொடங்கிய நாளில் இருந்து.., அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் வித்தியாசமான முறையில் எல்லாம் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவந்தனர். இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் முடிந்து விட்டது..
இந்நிலையில் தமிழ்நாட்டுக்கு பிரதமர் மோடி அடிக்கடி வந்து செல்வதால் எந்த பயனும் இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் செய்தியாளர்கள் சந்தித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க. ஆட்சிக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.., கேஸ் சிலிண்டர் விலையும் அதிகரித்துள்ளது. இவ்வளவு ஏன் வெறும் தேர்தல் கண்துடைப்பில் பெண்களை கவரு வதற்காக கேஸ் சிலிண்டரின் விலையை குறைத்துள்ளார்..,
கச்சா எண்ணெய் விலை குறைந்தபோதும், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை என குறிப்பிட்ட அவர், பா.ஜ.க.வும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் செயல்படுத்தப்படும் சிறப்பு திட்டங்கள் எதையும், தமிழகத்திற்கு 10 ஆண்டுகளாக ஒன்றிய அரசு தரவில்லை என்றும், மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் நிதியை ஒன்றிய பாஜக அரசு முழுமையாக வழங்குவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..