அண்ணாமலையின் டிஜிட்டல் வலைக்கு செக் வைத்த திமுக..!!
கோவை தொகுதி மக்களுக்கு, GPAY மூலமாக பணம் அனுப்பி, தாமரை சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறுவதாக திமுகவினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இந்தியாவில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழகத்தில் நாளை ஏப்ரல் 19-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் கோவை மக்களவை தொகுதியில் திமுக சார்பில் கணபதி ராஜ்குமாரும், அதிமுக சார்பில் சிங்கை ராமசந்திரன், பாஜக சார்பில் அண்ணாமலை நாம் தமிழர் கட்சி சார்பில் கலாமணி ஜெகநாதன் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு, அண்ணாமலை GPAY மூலமாக பணம் அனுப்பி, பின்னர் போன் செய்து தாமரைக்கு வாக்களிக்க வேண்டுமென கூறுவதாக திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.
திமுகவினர் அளித்த புகாரில் ”பாஜக வேட்பாளர் அண்ணாமலை தேர்தல் விதிமுறைக்கு மாறாக, அவினாசி சாலை அரவிந்த் கண் மருத்துவமனை அருகிலுள்ள அலுவலகத்தில், வெளி மாவட்டத்தவர்கள் தற்போதும் தங்கி இருந்து வாக்காளர்களுக்கு போன் செய்து தாமரை சின்னத்துக்கு வாக்களிக்குமாறு, GPAY மூலமாக பணம் விநியோகம் செய்து வருகிறார்” என கூறியுள்ளனர்.
சிறுகதைகள் – 75 | தொடர் கதை – 2 | கிரைம்- 572 + | கவிதைகள் – 150 + | எழுத்தாளர் – 4000 + | ஆன்மிகம் தொகுப்பாளர்
நம்மை வீழ்த்தியவர்கள் முன் ஜெயிக்க வேண்டுமே.. தவிர அடுத்தவர்களை வீழ்த்தி ஜெயிக்க கூடாது..