சுவையான மோர் குழம்பு ரெசிபி..!
தேவையான பொருட்கள்:
வெண்டைகாய் – 50 கிராம்
தயிர் – 2 கப்
கடுகு – 3/4 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் – 3
பெருங்காயத்தூள் – 1/2 தேக்கரண்டி
கறிவேப்பிலை
உப்பு
எண்ணெய்
மசாலா விழுது தயாரிக்க:
சிறிய வெங்காயம் – 3
பச்சை மிளகாய் -2
பூண்டு – 2 பற்கள்
தேங்காய் – 2 மேசைக்கரண்டி ( துருவியது )
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
தண்ணீர்
செய்முறை:
ஒரு வாணலில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து உப்பு போட்டு வறுத்துக் கொள்ள வேண்டும்.
மசாலா விழுது அரைக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை எல்லாம் ஒரு மிக்ஸியில் சேர்த்து தண்ணீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த மசாலா விழுது சேர்த்து புளித்த தயிர் ஊற்றி அதனை நன்றாக கலந்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலில் சிறிது எண்னெய் ஊற்றி அதில் கடுகு,சீரகம்,சிவப்பு மிளகாய்,பெருங்காயத்தூள்,கறிவேப்பிலை,வறுத்து வைத்துள்ள வெண்டைக்காய்,தயிர் கலவை மற்றும் உப்பு சேர்த்து சிறிது கொதிக்க வைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான மோர் குழம்பு தயார்.
